ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக IA.வாசித் அலி மேலதிக 02 வாக்கினால் வெற்றி

ஏ.ஆர்.றிபாய்-
றாவூர் நகர சபையின் தவிசாளர் பதவியை முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. இந்த சபையின் தவிசாளராக முன்னாள் முதலமைச்சர் ZA.ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் வழிகாட்டலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட IA.வாசித் அலி 02 மேலதிக வாக்கினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஏறாவூர் நகர சபையின் முதலாவது அமர்வு (05.04.2018) வியாழக்கிழமை இன்று கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.
17 உறுப்பினர்களைக் கொண்ட ஏறாவூர் நகர சபையின் இந்த முதலாவது அமர்வில் 17 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது தவிசாளர் பதவிக்காக முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் SM.நளீம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் IA.வாசித் அலி ஆகிய இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. தவிசாளர் தெரிவுக்காக திறந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக 09 வாக்குகளும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 07 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதனடிப்படையில் 02 மேலதிக வாக்கினால் IA.வாசித் அலி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

பிரதி தவிசாளர் தெரிவில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் SM.நளீம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ML.ரெபுபாசம் ஆகியோரின் பெயர்கள் முன் மொழியப்பட்டன. SM.நளீம் போட்டியில் இருந்து விலகி கொண்டார்
இதன் படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலான ML.ரெபுபாசம் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
தவிசாளர் தெரிவின் போது ஐக்கிய தேசியக் கட்சியின்04 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 02 உறுப்பினர்களும் சுயேட்சைக்குழுவைச் சார்பிலான உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் உறுப்பினர் நடுநிலை என்று சபையில் அறிவிப்பு
மேற்படி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள IA.வாசித் ஏறாவூர் நகர சபைக்கு ஜிப்ரியா வட்டாரத்தில் வெற்றி பெற்று உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -