கல்முனை 11ஆம் வட்டார மக்களுடனான சந்திப்பொன்று நேற்றுமுன்தினம்(19)சனிக்கிழமை மாலை கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஹென்றிமகேந்திரன் கல்முனை
11ஆம்வட்டார பல்தேவைக்கட்டடத்தில் நடைபெற்றது.
தேர்தலுக்குப்பின்னரான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தைக்கூட்டிய கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஹென்றிமகேந்திரன் விளக்கமாக விபரித்தார்.
கல்முனை வாழ் தமிழ்மக்களின் 3 அம்சக்கோரிக்கையை முன்வைத்து நாம்
தேர்தலில் நின்றோம். மக்களும் ஆணைதந்து அனுப்பிவைத்தார்கள். அந்த
3அம்சக்கோரிக்கையை முன்வைத்தே ஆட்சியமைப்பிலும் செயற்பட்டோம்.
ஆனால் அதற்கான உறுதியான முடிவு எட்டப்படாமையினால் நாம்
எதிர்த்தரப்பிலுள்ளோம். மாநகரசபையின் ஏனைய குழுக்கள் அமைக்கும்
விடயத்திலும் நாம் எமது மக்களின் 3அம்சக்கோரிக்கையைத்தான் முன்வைத்தோம்.
அதற்கும் தீர்க்கமான இணக்கப்பாடு காணப்படாமையினால் ஒதுங்கிநிற்கின்றோம்.
எமது பாதை பயணம் சரியென்றால் கூறுங்கள். கல்முனைத்தமிழர்களின்
அபிலாசகைளுக்கு குறுககாக அல்லது விரோதமாகச் செயற்படமாட்டோம். இன்றேல் உங்களின் ஆலோசனைப்படி நாம் இயங்கத்தயார் .மாற்றுக்கருத்திருந்தால் கூறுங்கள் என்று கூறினார்.
பதிலுக்கு சமுகமளித்திருந்த மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நீங்கள் எடுத்த முடிவும் செல்கின்ற பாதையும் சரியானதே. அதன்படி செல்லுங்கள் என ஏகமானதாக இணக்கப்பாட்டுடன்கூறினார்கள்.
கூடவே சக மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் எஸ்.இராஜரெத்தினம் மூத்த உறுப்பினர் கு.ஏகாம்பரமும் சமுகமளித்திருந்தனர்.
11ஆம் வட்டாரத்திற்கான மக்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களது தேவைகள் அறியப்பட்டதுடன் அவர்களிடிருந்து 35பேர் கொண்ட செயற்குழுவும் குறிச்சிக்கு 7பேர் கொண்ட உபகுழுக்களும் தெரிவுசெய்யப்பட்டன.