கினிகத்தேனை பிளக்வோட்டர் தோட்ட பகுதியிலுள்ள ஆறு பெருக்கெடுத்தமையினால் 20 குடும்பங்கள் தற்காளிகமாக வெளியெற்றப்படுள்ளனர்
பிளவோட்டர் தோட்ட பகுதியை சேர்ந்த குடியிருப்பாளர்கள் தொடர்.சியாக மழை காலங்களில் ஆற்று வெள்ளத்தில் பாதிப்படைந்து வருகின்றனர்
21.05.2018 அதிகாலை முதல் ஏற்பட்ட அடை மழையில் ஆற்று வெள்ளப்பெருக்கெடுத்ததில் குடியிருப்புகளுக்குள்ள வெள்ளம் புகுந்ததமையினால் உடைமைகள் நீரில் நாசமாகியது
பாதிக்கப்பட்ட 100 பேர் வரை பாசாலையில் தங்கவைக்கப்ப.டுள்ளனர்
பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு மத்திய மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீதன் உட்பட நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜின் இணைப்ச்செயலாளர் சதீஸ்குமார் ஆகியோர் சென்று பார்வையிட்டத்துடன் கினிகத்தேனை பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்டு பாதிக்கப்படவர்களுக்கு தொடர்பில் அறிவித்துள்ளதுடன் அணர்த்த முகமைத்துவ மத்திய நிலையத்தினூடாக குறித்த ஆற்றை அழ அகழப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.