அம்பாறையில் ACMC யின் இருப்பை தக்கவைப்பதற்கு ஹசனலிக்கு தேசிய பட்டியல் கொடுப்பதே காலத்தின் தேவை…


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் -
சன் அலிக்கு தேசிய பட்டியல் கொடுக்கப்படுவதால் ACMCக்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன..?

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான நவவி அந்த பதவில் இருந்து இராஜினாம செய்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக கட்சியின் தலைமையும் அமைச்சருமான றிசாட் பதுர்டீன் அம்பாறை மாவட்டத்தில் யாருக்கு அந்த தேசிய பட்டியல் ஆசனத்தை கொடுக்க போகின்றார் என்பது அம்பாறையில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களை விடவும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், அதன் தலைமை, தேசிய அரசியல் என பரவலான எதிர்பார்பிற்குள்ளும், சமகாலத்தில் முக்கிய பேசுபொருளாகவும் மாறியுள்ள அரசியல் விடயமாக பார்க்கப்படுகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாட் பதுர்டீன்அரசியல் வளர்ச்சி அம்பாறையில் வெற்றிடை போட்டுக்கொண்டு வரும் இந்தச் சூழ்நிலையில் இருப்பது ஒரு கதிரை அதில் யார் அமர்வர்" என்பதே பரவலான கேள்வி. அந்த வகையில் பார்த்தால், ஒருபுறம் வீ.சி. இஸ்மாயிலுக்கு கிடைக்கலாமென பலரும் பேசிக் கொள்கின்றனர். இருந்த போதிலும் நம்பத் தகுந்த வட்டாரங்களின் பிரகாரம் அந்த பதவி சில வேளை பொத்துவில் தொகுதிக்கோ அல்லது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலுக்கோ செல்ல கூடிய வாய்ப்புள்ளதாகவே அறிய முடிகின்றது

நடை பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு இருந்த செல்வாக்கினை விடவும் முஸ்லிம் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை ஒப்பிடுகின்ற பொழுது முஸ்லிம் கூட்டமைப்பின் செல்வாக்கு அதிகமானதாகவே காணப்படுகின்றது. எதிர்பார்க்கப்படுகின்ற எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வாக்கு வங்கியினை அம்பாறை மாவட்டத்தில் தக்க வைக்க வேண்டுமாக இருந்தால் சம்மாந்துறை தொகுதியை சேர்ந்த தற்போதைய தவிசாளர் நெளசாட் மஜீத், முன்னாள் வேட்பாளர் இஸ்மாயில், அதே போன்று கல்முனை தொகுதியை சேர்ந்த ஜெமீல், வை.எல்.எஸ்.ஹமீட், பொத்துவில் தொகுதிய சேர்ந்த எஸ்.எஸ்.பி மஜீதினை விடவும் முஸ்லிம் கூட்டமைப்பின் இஸ்தாபகர் ஹசனலிக்கு வழங்குவதே சிறந்த முடிவாக அமையும்.

அல்லது சம்மாந்துறை தொகுதியில் மட்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரசினை தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தவிசாளருமான நெளசாட் மஜீதுக்கு கொடுப்பதன் ஊடாக அதனை சாத்தியப்படுத்தி கொள்ளகூடிய அரசியல் முடிவாக காணப்படுகின்றது. மறுபக்கத்திலே சம்மாந்துறையை சேர்ந்த இஸ்மாயிலுக்கு வழங்குவதனால் கல்முனை மற்றும் பொத்துவில் தொகுதி போன்ற பிரதேசங்களில் அகில இலங்க மக்கள் காங்கிரசிற்கு இருக்கின்ற செல்வாக்கு எதிர்காலத்தில் வீழ்ச்சியினை ஏற்படக்குடிய நிலைமையினை தோற்றுவிக்கும்.

அதே போன்று கல்முனை தொகுதியினை சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலுக்கு வழங்குவதனை சம்மாந்துறை வாக்காளர்கள் ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் பொதுவில் தொகுதியில் வரவேற்பு கிடைக்க வாய்ப்பில்லாமலே இருக்கின்றது. இதற்கு முக்கியமாக பொத்துவில் தொகுதியை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி மஜீதுக்கும் முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்புக்கும் இடையிலான குடும்ப உறவு ரீதியான ஓர் அரசியல் செயற்பாடு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.

அது மட்டுமல்லாது சமகாலத்தில் முஸ்லிம் காங்கிரசிற்கு எதிரான அரசியலினை செய்யக்கூடிய ஆளுமை இஸ்மாயில் மற்றும் ஜெமீல் போன்றவர்களிடம் காணப்படாமை மிகப்பெரிய அரசியல் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள விடயமாக மாறியிருக்கின்றது. ஆகவே முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு தேசிய பட்டியலினை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமைத்துவம் கொடுக்க எடுக்கின்ற முடிவில்தான் அந்த கட்சியினுடைய எதிர்கால தெளிவான வெற்றியும், இருக்கின்ற வாக்கு வங்கியினை பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து தக்கவைத்துக்கொள்ள கூடிய தலைமைக்கு இருக்க வேண்டிய சானக்கியம் என்பதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -