(வீடியோ)., ACMC யின் தேசிய பட்டியல் சம்பந்தமாக சிராஸ் மீராசாஹிப் ஓர் பார்வை…


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்- 
ராஜினாம செய்யப்பட்டுள்ள நவவியின் தேசிய பட்டியலினை கல்முனை தொகுதிக்கு வழங்கப்படுமாக இருந்தால் மக்கள் மத்தியில் ஜனரஞ்சகமான முறையில் தனக்கு இயலுமான சேவைகளை செய்து அகில இலங்கை மக்கள் காங்கிரசில் அங்கம் வகிக்கின்ற முன்னாள் கல்முனை மாநகர சபையின் முதல்வர் சிராஸ் மீராசாஹிப்பிற்கு, வழங்குவது கட்சியின் வளர்ச்சியில் ஒரு கனிசமான முன்னேற்றத்தை கல்முனை தொகுதியில் தரக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதனை ஒரு தடவை அசை போட்டு அலசிப்பார்ப்பது இந்த நாட்களில் ஒரு முக்கிய விடயமாகவும் தேவையாகவும் இருக்கின்றது.

அந்த வகையிலே சிராஸ் மீராசாஹிப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினை பிரதி நிதித்துவப்படுத்தி கல்முனை மாநகர சபையின் முதல்வராக இருந்த காலப்பகுதியில் சகல மக்களையும், சகல ஊர்களையும், சகல சமூகத்தினரையும் அரவனைத்து கரைபடியாத கரங்களோடு ஊழலற்ற மாநகர சபையாக கல்முனை மாநகர சபையின் ஆட்சியினை நடாத்தி காட்டியவர். அது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் ஜனரஞ்சகமாகியதுடன் கல்முனை பிரதேசத்தில் சகல மக்களாலும் விரும்பப்படுகின்ற ஒருவராகவே காணப்படுகின்றார்.

எல்லாவற்றுக்கும் மேலாக நிசாம் காரியப்பருக்கு மேயர் பதவியினை விட்டுகொடுப்பு செய்ய வேண்டும் என முஸ்லிம் காங்கிரசின் தலைமை அழுத்தம் கொடுத்த பொழுது சுய மரியாதையுடன் இராஜினாம செய்து தனது முதல்வர் பதவியினை கல்முனைக்கு விட்டுக்கொடுப்பு செய்த நியாயமான அரசியல்வாதியாக கல்முனை, சாய்ந்தமருது மக்களால் மதிக்கப்படுகின்றவர்.

அதற்கு பிற்பாடு அகில இலங்கை மக்கள் காங்கிரசோடு இணைந்து கொண்டதுடன் தனது கொழும்பு சாகிறா கல்லூரியின் பாடசாலை நண்பனும் ஒன்றாக கல்வி கற்றவரும் அமைச்சருமான றிசாட் பதுர்டீனுடன் கைகோர்த்து தனது அடுத்த கட்ட அரசியல் வாழ்க்கையினை தொடர்ந்தவர். அந்த வகையில் அன்று தொடக்கம் இன்று வரை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமைத்துவத்திற்கு விசுவாசமாக இருந்து வருகின்றார். அரசியல்லுக்கு சிராஸ் வருவதற்கு முன்பிருந்தே அமைச்சர் றிசாட் பதுர்டீனுடன் முக்கிய உள்ளக தொடர்புகளை வைத்திருந்தவர்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எதுவித எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் இறக்காமத்தில் நின்று இரவு பகல் பாராமல் கடுமையாக போராடி அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு கிடைத்த வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர். எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் சரி அரசியல் ரீதியான முன்னெடுப்புக்கள், மாநகர முதல்வர், பாராளுமன்றம் என எதை கொடுத்தாலும் தனது நிருவாக திறமையினை வைத்து அதனை திறம்பட செய்து காட்டக்கூடிய திறமை சாலியாக அம்பாறை மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி அமைச்சர் றிசாட் பதுர்டீனுடன் கைகோர்த்து இன்று வரைக்கும் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றார்.

மேலும் மும்மொழிகளும் திறமையாக பேசக்கூடிய சிராஸ் ஒரு திறந்த சிந்தனையாளராக கல்முனை தொகுதியில் இருந்து வருவதானது அகில இலங்கை மக்கள் காங்கிரசினை பிரதி நிதித்துவப்படுத்தி பாராளுமன்ற கதிரையில் உட்கார்வதற்கு போதுமான தகுதியாகவே மக்களால் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் கல்முனை தொகுதிக்கு தேசிய பட்டியலினை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமை வழங்குமாக இருந்தால் மக்கள் மத்தியில் ஜனரஞ்சகமான முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பிற்கு வழங்குவதனூடாக அகில இலங்கை மக்கள் காங்கிரசினுடைய எதிர் கால இளம் சமூதாயத்தினை ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பிற்குள் ஒரு முகப்படுத்தி முழு கல்முனை தொகுதி அடங்களாக ஏனைய அம்பாறை மாவட்ட பிரதேசங்களையும் கட்சியினுடைய ஆளுமைக்குள் கொண்டுவருவது இலகுவாக அமையும் என்பதே இந்த கட்டுரையின் சாராம்சமாகும்.

சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாகிப்பினால் வழங்கப்படு பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்த நேர்காணலின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காகவும். சமகால அரசியலில் தாக்கம் செலுத்துகின்ற கருத்துக்களாக இருக்கின்ற படியினாலும் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ கணொளி சிராஸின் கருத்துக்கள் :-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -