காரைதீவு பிரதேச சபை வரலாற்றில் முதல் முஸ்லிம் பிரதித் தவிசாளர் ஜாஹிருக்கு வரவேற்பு..



காரைதீவு நிருபர் சகா-
காரைதீவு பிரதேச சபையின் வரலாற்றில் முதல் முஸ்லிம் பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாளிகைக்காடு அமைப்பாளர் ஏ.எம்.ஜாஹிருக்கு மாளிகைக்காடு அல்-ஹூசைன் வித்தியாலயத்தினால் வரவேற்பளிக்கும் நிகழ்வு (26.04.2018) இடம்பெற்றது.
அல்-ஹூசைன் வித்தியாலய அதிபர் ஏ.எம்.எம்.நழீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம்.அஷ்ரஃப் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது காரைதீவு பிரதேச சபை பிரதித் தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் மாணவர்களால் வரவேற்கப்பட்டு பாடசாலை அதிபர்இ ஆசிரியர்கள் குழாமினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மாளிகைக்காடு முதலாம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோடம்பழ சுயேற்சை குழு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளின் மும்முனை போட்டிக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏ.எம்.ஜாஹிர் போட்டியிட்டு வெற்றிபெற்றதுடன் காரைதீவு பிரதேச சபையின் வரலாற்றில் முதல் முஸ்லிம் பிரதித் தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -