அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளில் ்இலங்கை சாா்பாக கலந்து கொண்டு பதங்களைப் பெற்ற 6 வீரா்களுக்கும் கொழும்பில் 6 வீடுகள் கையளிக்கப்பட்டது. இவ் வீடுகள் மே 1ஆம் திகதி மறைந்த ஜனாதிபதி ஆர் பிரேமதாசாவின் 25வது மறைவு தினத்தில் அவரது ஞாபகாா்த்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமா் ரணில் விக்கிரமசிங்க , வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச ஆகியோரினால் வீடுகளுக்கான திறப்புகள் மற்றும் தஸ்தாவேஜூகளை கையளித்தனா்.
பளு துாக்கும் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திக்க திசாநாய்க்க, வென்கலப் பதக்கம் வென்ற ஜே.ஏ.சீ.லக்மால், மற்றும் பீ.டி.ஹன்சனிகோமஸ், மகளிா் குத்துச் சன்டையில் பதக்கம் வென்ற அனுசா கொடிதுவக்கு, வென்கலபதக்கம் வென்ற திவங்க ரணசிங்க .மற்றும் இசான் செனவிரத்தின பண்டாரா ஆகிய வீராங்கனைகளுக்கே வீடுகள் கையளிக்க்பட்டன.
பொது நல வாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் முதற்தடவையாக இம்முறை இலங்கை கூடுதல் பதங்கங்களை பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். . இவ் வீரா்களை கௌரவிக்கும் முகமாகவும் இவ் வீரா்கள் தமது பயிற்சிக்காக கொழும்பில் தங்கியிருப்பதற்காகவே வீட்டுத் தேவையை அறிந்த அமைச்சா் சஜித் பிரேமதாச இவா்களுக்காக வீடுகள் வழங்க தமது அமைச்சின் ஊடக நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.