முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தை கல்முனையில் (மே 18 திகதி) மாலை 6மணிக்கு கல்முனையில் நினைவுதின நிகழ்வை கல்முனை மாநகரசபை உறுப்பினரும் பிரபல சமுகசேவையாருமான ராஜன் சந்திரசேகரம் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிகழ்வில் த.தே.கூட்டமைப்பின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். கல்முனை மாநகரசபையில் அங்கம்வகிக்கும் த.தே.கூட்டமைப்பின் 7உறுப்பினர்களும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கி.ஜெயசிறில் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அந்நிகழவில் பங்கேற்குமாறு அனைத்து பொதுஅமைப்புக்களையும் விளையாட்டுக்கழகங்களையும் அனைத்து சமயம்சார்ந்த அமைப்புக்களையும் இளைஞர்கள் யுவதிகள் அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.