இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தாயாரின் இறுதி கிரியைகள் 18.05.2018 அன்று இடம்பெற்றது.
இந்தியா சிவகங்கை மாவட்டம் திருப்பந்தூர், அம்பத்தூர் கிராமத்தில் அன்னாரின் இறுதி கிரியைகள் 18.05.2018 அன்று பிற்பகல் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
சுகயீனம் காரணமாக அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டிருந்த ஆறுமுகன் தொண்டமானின் தாயாரான திருமதி. ராஜேஸ்வரி அம்மாள் கடந்த 16ம் திகதி புதன்கிழமை மாலை 4 மணியளவில் காலமானார்.
இவர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் தாயாரும், முன்னால் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அமரர். ராமநாதன் தொண்டமான் அவர்களின் மனைவியுமாவார்.
இந்த இறுதி கிரியைகளில் இந்தியா தமிழ்நாட்டின் அரசியல் பிரமுகர்கள் பலர் உட்பட, இலங்கையிலிருந்து காங்கிரஸின் உயர் மட்ட குழுவினர் உட்பட மாகாண மற்றும் உள்ளுராட்சி சபை மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் கலந்து கொண்டமை மேலும் குறிப்பிடதக்கது.