பூண்டுலோயா மிருக வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா

க.கிஷாந்தன்-
டந்த 40 வருடங்களாக மிகவும் சிறிய அறையிலே இயங்கி வந்த பூண்டுலோயா மிருக வைத்தியசாலை காரியாலயத்திற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மத்திய மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு வைபவ ரீதியாக 10.05.2018 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த 10 வருடங்களாக. புதிய ஒரு கட்டிடத்தை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பல சிக்கல்களின் காரணமாகவும் வளப் பற்றாக்குறை காரணமாகவும் நடைபெறாமல் இருந்தது

இதனையடுத்து அமைச்சர் ராமேஸ்வரன் அவர்களின் முனைப்பான செயலின் ஊடாக 230 லட்சம் ரூபா செலவிலேயே இந்த புதிய கட்டிடத்தை அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு 10.05.2018 அன்று புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வைபவம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கொத்மலை பிரதேச சபையின் உப தலைவர், உறுப்பினர்கள், மாகாண. பணிப்பாளர்கள், மிருக வைத்தியர்கள், அமைச்சின் அதிகாரிகள், பயனாளிகள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -