கொழும்பு மாநகர சபை மதவிழிபாட்டுத் தலங்களுக்கு உதவிப் பணம் வழங்கும்




அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு மாநகர சபையின் கீழ் பதியப்பட்ட சகல மதவிழிபாட்டுத் தலங்களுக்கும் வருடாத்தம் மாநகர சபையினால் வழங்கும் 50 ஆயிரம் ருபா உதவிப் பணம் இவ்வருடத்திற்குள் வழங்கப்படும். என கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோசி சேனாநாய்கக தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் பொதுக் கூட்டம் நேற்று மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தின்போது மேற்கண்ட உறுதிமொழியை உறுப்பிணர்களுக்கு வழங்கினார்.
மேலும் கூட்டத்தின்போது நிதியற்குழுவின் அனுமதி, கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
தொடர்ந்து அக் கூட்டத்தின்போது ரோசி பதிலளிக்கையில் -
எதிவரும் பொசன் தினத்தினபோது; கொழும்பு மாநகர சபைக்குள் பதியப்பட்ட 120 பண்சாலைகளுக்கும் 60 இலட்சம் ருபா நிதியினை சபையில் அனுமதி கோறினார். அச்சமய்தில் தமிழ், முஸ்லீம்; உறுப்பிணர்கள் ஹிந்துக் கோவில்கள் ,பள்ளிவாசல்களுக்கும் இதுபோன்று உதவித் தொகை வழங்குமாறும் சபையில் கோரிக்கை விடுத்தனர். இக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட மாநகர முதல்வர் எதிர்வரும் நோன்பு மாத்தில் பள்ளிவாசல்களுக்கும், நவராத்திரி தினத்தில் ஹிந்துகோவில்களுக்கும் தலா ஒவ்வொறு மதஸ்தாபனதத்pற்கும் 50ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும.; என உறுதியளித்தர்..
அதே வேளை மாநகர சபையின் உறுப்பிணர்களது ; கூட்டங்களை நடாத்துவதற்கு இதுவரை காலமும் 53 உறுப்பிணர்களுக்கே இந்த மண்டபம் வசதிகள் அமையப் பெற்றுள்ளது. தற்பொழுது 119 உறுப்பிணர்கள் இச் சபையில் உள்ளனர். அதற்காகவே கூட்ட மண்டபத்தினையும் உறுப்பிணர்களுக்கான இருப்பிடம் ஒலிவாங்கி பேன்ற வசதகளை விரிவுபடுத்தி உள்ளக கட்டுமாணத்திற்காக உரிய நிதியினை அனுமதி தருமாறு முதலவர் வேண்டிக் கொண்டார். இதற்காக (15,953;,496) கிட்டத்தட்ட 16 கோடி ருபா நிதியினை செலவழிக்கப்பட உள்ளதனை தெரிவித்தார். அத்துடன் தற்போதைய மாநகர சபையின் நிர்வாகப் பகுதிகளும் இட நெறிசல் உள்ளதாக காணப்படுதவதாகவும் இதற்காகவே புதிய ஒரு நிர்மாணத்தினை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். இதற்கு உரிய கட்டுமாணப் கம்பணி அனுமதி அளிக்க்பபட்டுள்ளது என முதல்வர் சபையில் தெரிவித்தார். இதற்காக சில உறுப்பிணர்கள் இக் நிர்மாணத் கம்பணியின் நிர்மாணத் தரம் பற்றி சபைக்கு தெரிவிக்கவில்லை. எனக் கூறப்பட்டது.

மீத்தொட்டுமுல்ல குப்பை மேட்டின் மண்சரிவு ஏற்பட்டதன் மூலம் பாதிக்க்பபட்டவர்களுக்கு உரிய நஸ்ட ஈடு இதுவரை வழங்கப்படவில்லை. என ஷாமிலா கோனவெல உறுப்பிணர் கேள்வி எழுப்பினார். இதற்காக கொழும்பு நாகர சபை ஒதுக்கியுள்ள நிதி நஸ்ட ஈடுகள் பற்றி கணக்கறிக்கை ஆய்வாளது அனுமதியின்றி உள்ளதாக கேள்வி எழுப்பினார்.

அத்துடன் கொழும்பு மநாகரசபையின் ஸ்ரீ.ல.பொதுசன பெரமுனவில ;27 உறுப்பிணர்கள் உள்ளனர் எமது கட்சிக்கே எதிர்கட்சி உறுப்பிணர் வழங்கப்பட வேண்டும். என தயா பெரேரா கோரிக்கை விடுத்தார்.
இதன்போது குறுக்கிட்ட மாநகர சபை உறுப்பிணர் அசாத் சாலி எமது ஸ்ரீ.ல.சு கட்சியினருடன் கடந்த மாதம் அமைச்சர் மனோ கனேசனின் 9 உறுப்பிணர்களும் இணைந்து 27 உறுபபிணர்களுடன் எதிர்;கட்சித் தலைவர் ஆதரவு தெரிவிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் மனோ அமைச்சரின் 9 உறுப்பிணர்களும் ள இன்று ஆளும் கட்சியுடன் தற்பொழுது சேர்ந்து விட்டனர்.
இவ்விடயம் பற்றி மகனோஅமைச்சரின் கட்சியின் பிரநிதி பிரியானி தகவல் தருகையில் எமது அமைச்சர் ஆளும் கட்சியில் அங்கம் வகிப்பதால் நாங்கள் ஆளும் கடசியிலே ஆதரவு வழங்குமாறு எங்களுக்குத் தெரிவித்தனாலேயே நாங்கள் ஆளும் கட்சி ஜ.தே.கட்சியுடன் இணைந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த மாதம் மாநகரசபையின் ஆரம்ப வைபவத்திற்கு 500 பேருக்கு மூவ்வேளையும் உணவுக்காகமட்டும் 16 இலட்சத்து 825 ருபா பாரிய நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் இவ் உணவு பரிமாறும் நிறுவனமிடந்து உரிய கேள்வி முறிவு கேட்கப்பட்டதா? எனவும் இந் நிதி கொழும்பில் வாழும் மக்களது வரி செலுத்தும் நிதியை வீண் விரயம் செய்துள்ளதாகவும் மாநகர சபை உறுப்பிணர் உமாசந்திரா தெரிவித்தர்.
இங்கு கருத்து தெரிவித்த முதல்வர் ரோசி சேனாநயக்க சகல உறுப்பிணர்கள் மாநர சபையின் நிதி தொடர்பான நிலைக்குழுவில் அங்கம் வகித்துள்ளனர். இங்கு செலவழிக்கும் ஒவ்வொரு செலவினங்களுக்கும் நிதியற்குழு ; வாக்கெடுப்புக்கு விடுக்கப்பட்டு அனுமதித்த பின்னரே உரிய கேள்வி முறிவு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
அத்துடன் கொழும்பு மாநகர சபையின் கீழ் உள்ள 12 பாலர் பாடசாலைகளை சகல வசதிகளும் கொண்டதாக தரமுயர்த்துவதற்கு உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி சிறுவர் அதிகார சபைகளிடமிருந்து உரிய நிதி பெற்று சிறந்த பாடசாலைகளாக மாற்றுவதற்கே இப் பாடாசலைகளை இடைநிறுத்தியுள்ளதாக முதல்வர் தெரிவத்தார்.
அத்துடன் மேயர் பங்களாவில் உள்ள 2 மலசல கூடம் திருத்துவதற்காக 13 இலட்சம் ருபா வை செலவழிப்பதற்கு உறுப்பிணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந் நிதியை புறக்கோட்டை சந்தை பஸ் நிலையங்கள் முன்பாக இருக்கும் பொதுமக்கள் மலசல கூடம் பழமை வாய்ந்து சீரற்றுக் காண்பபடுகின்றது இதனையும் திருத்துமாறும் வேண்டிக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -