நிந்தவூரைச் சேர்ந்த அல்-ஹாபிழ,;மௌலவி ஏ.பி.எம்.சிம்லி(நஹ்ழி)இன்று(15-05-2018)செவ்வாய்க்கிழமை காலை மாலைதீவுக்குப் பயணமானார்.இவர் மாலைதீவில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் புனித றமழான் மாதம் முழுவதும் தறாவிஹ் தொழுகை நடாத்தவுள்ளார்.
இலங்கைக்கான மாலைதீவு தூதுவராலயத்தில் மாலைதீவு முஸ்லிம் கலாச்சார அமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டி அடிப்படையிலான நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டே இவர் மாலைதீவுக்குப் பயணமானார்.
இவர் தனது அல்ஹாபிழ் பட்டத்தை சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தில் பெற்றுள்ளார்.ஷரீயா(மௌலவி)உயர் கற்கை மருதமுனை அந்நஹ்லா அறபுக் கல்லூரியில் பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.