இராஜேஸ்வரி இராம்நாதன் தொண்டமானின் மறைவையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
இவரின் இரங்கல் செய்தி வருமாறு:-
மலையக மக்களின் வாழ்வியல் முதல் அரசியல் வரையான அனைத்து விடயங்களிலும் தொண்டமான் குடும்பத்தின் பங்கும், பங்களிப்பும் அளப்பரியது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மூலமாகவே மலையக மக்களின் வாழ்வில் ஏற்றமும், மாற்றமும் ஏற்படுத்தி தரப்பட்டன. மலையக மக்களின் மேம்பாட்டுக்காக சௌமியமூர்த்தி தொண்டமான், இராமநாதன் தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருடன் இணைந்து அம்மையார் அரும்பணி ஆற்றி உள்ளார்.
குறிப்பாக மலையக மக்களின் விடிவெள்ளியாக, புரட்சி தலைவராக, செயல் வீரராக, நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்ற ஆறுமுகன் தொண்டமானை பெற்று தந்த அன்னை என்கிற வகையில் இவரை மலையக மக்களால் என்றைக்குமே மறக்க முடியாது.
இவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மாத்திரம் அன்னை அல்லர். ஒட்டுமொத்த மலையக மக்களுக்குமே அன்னை ஆவார். இந்நிலையில் இவரை இழந்து தவிக்கின்ற ஆறுமுகன் தொண்டமானினதும், அவரின் குடும்பத்தினதும் துயரத்தில் அனைத்து மலையக மக்களுமே பங்கெடுக்கின்றனர். அது போல நாமும் இவரின் துயரத்தில் பங்கெடுக்கின்றோம். ஆறுமுகன் தொண்டமானுக்கு உந்து சக்தியாக, ஊக்கியாக செயற்பட்ட அன்னையார் அவருடைய மனதில் தெய்வமாக உறைந்து நின்று தொடர்ந்து வழிகாட்டுவார் என்கிற விசுவாசத்துடன் ஆறுதல் அடைகின்றோம்.