விருது வழங்கும் துறைகளில் ஊடகத்துறையை உள்வாங்குமாறு தெரிவித்து மகஜர் கையளிப்பு.


எப்.முபாரக்-

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடா வருடம் வழங்கப்படும் வித்தகர் விருது இளங்கலைஞர் விருது போன்றவற்றுக்கு ஊடகத்துறையை சார்ந்தவர்களையும் அவர்களது பணியை கௌரவிக்கும் முகமாகவும் இவ்விருதுக்கு பரிசீலனை செய்யும்படி கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வளர்மதி ரவீந்திரன் அவர்களுக்கு திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் சார்பில் இன்று (17) மகஜர் ஒன்றினை அதன் தலைவர் அ.அச்சுதன் அவர்களினால் கையளிக்கப்பட்டது. 

அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:தங்களால் முன்னெடுத்து வருகின்ற வித்தகர் மற்றும் இளங்கலைஞர் விருது போன்ற திட்டங்கள் மிகவும் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.இதில் மேலும் சிறப்புடைய ஒன்றாக விளங்குவது இளஞ்கலைஞர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக விருது வழங்கி வருகின்றது. கடந்த 2016 ஆம் ஆண்டு இளங்கலைஞர் விருதுக்கு ஊடகத்துறையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பணியாற்றி வரும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தார்கள் எனினும் 2017 ஆம் ஆண்டு இத்துறைக்காக பல ஊடகவியலாளர்கள் விண்ணப்பித்த போதும் ஊடகத்துறைக்கான விருதுக்கு எவரும் தெரிவு செய்யப்படவில்லை இதனால் ஊடகவியலாளர்கள் மத்தியில் கவலையையும்,ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. 

கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளையும் அரச மற்றும் அரச சார நிகழ்வுகளையும் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணர்வதுடன் சேவை நோக்கத்தில் அன்றாடம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற ஊடகத்துறையை இவ்வாண்டு(2018) தங்களின் விருது வழங்கும் நிகழ்வில் ஒரு துறையாக உள்வாங்கி அவர்களை கௌரவித்து அங்கீகாரம் ஒன்றை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -