இலங்கைக்கு வருகைதந்த பஹ்ரைன் நாட்டு பிரதிப் பிரதமர் காலித் பின் அப்துல்லாஹ் அல் கலீபா இலங்கையில் பஹ்ரைன் நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின்போது பஹ்ரைன் நாட்டு பிரதிப் பிரதமருடன் அந்நாட்டைச் சேர்ந்த பல முதலீட்டாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது பஹ்ரைன் நாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டு வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடினர்.
மேலும் இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸை பஹ்ரைன் நாட்டிற்கு வருகைதருமாறு பஹ்ரைன் நாட்டு பிரதிப் பிரதமர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.