எ .எம்.றிசாத் -
தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து செய்யப்பட அழைப்புவிடுத்தார் அமைச்சர் றிஷாட் பதியுதீன் இல்லை இனவாத பிரசாரம் மூலம் தான் எங்களை பாதுகாக்க முடியும் என்கிறது கூட்டமைப்பு...
வன்னி மாவட்டத்தில் அரசியல் ரீதியாக இணைந்து தமிழ் முஸ்லிம் என்ற பிரிவினை இல்லாமல் சேவை செய்ய இணைந்து வாருங்கள் என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்தார் கூட்டமைப்புக்கு அந்த அழைப்பை சுமந்திரன் போன்ற மூத்த அரசியல் வாதிகள் ஏற்ற போதும் வன்னியில் இருக்கின்ற கூட்டமைப்பின் அரசியல் முகவர்கள் அந்த அழைப்பை நிராகரித்தனர்....
இருந்தும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் நாகரீகமாகவும் நல்லபடியாகவும் நடந்துகொண்டார் நானாட்டம் பிரதேசபை வரவேற்பு நிகழ்வில் தமது கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய கூடாது நல்ல படியாக அந்த நிகழ்வில் பங்கேற்க கூறியிருந்தார் தலைமையின் வார்த்தைக்கு கட்டுப்படடவர்களா இருந்து அந்த நிகழ்வை சிறப்பித்தனர் ஆனால் கூட்டமைப்பின் நிலை மாற்றமாக இருந்தது....
மன்னார் பிரதேசபை நிகழ்வில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பகிஷ்கரித்தார்கள் ஏன் இந்த மனநிலையில் கூட்டமைப்பினர் உள்ளனர் என கேற்கின்றோம்.மன்னாரை தமிழ் கூட்டமைப்பு மட்டும் தான் ஆட்சி செய்ய வேண்டுமா தமிழர்களும் முஸ்லிகளும் ஒற்றுமையாக வாழக்கூடாத ஏன் கூட்டமைப்பினர் பிரித்து வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள்...
கூட்டமைப்பிடம் வன்னி மாவட்ட அரசியல் அதிகாரம் இருந்த காலத்தில் அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் இந்த மக்களுக்கு. மாகாண அதிகாரம் உள்ளது, மத்திய அரசியல் அதிகாரம் உள்ளது, எதை அந்த மக்களுக்கு செய்து கொடுத்துள்ளார்கள். எதையும் செய்ய வில்லை இந்த கூட்டமைப்பினர் அந்த மக்களிடம் உரிமை, தனிநாடு என கோஷமிட்டு அந்த மக்களின் வாக்குகளால் அரசியல் கதிரைகளை எடுத்து விட்டு குளிரூட்டப்பட்ட அறைகளுக்கு இருந்துகொண்டு ஆசைவார்த்தைகளை கூறி பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டு மக்களை ஏமாற்றி வரும் கூட்டமைப்பினர்.
அந்த மக்கள் இன்னும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகினறனர். அந்த மக்களின் அவல நிலை கண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன் இந்த பிரதேசபை அதிகாரத்தின் மூலமாவது இணைந்து மக்களுக்கு சேவை செய்ய இந்த கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தார. ஆனால் அதை நிராகரித்து மக்களை முட்டாளாக்கும் கருத்துக்களையும் அமைச்சர் மீது அபாண்டத்தையும் சுமத்தி மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பு எப்போது மக்களை பற்றி சிந்திக்குமோ தெரியவில்லை...
அமைச்சர் றிஷாட் பதியுதீன் இனமதமற்ற முறையில் சேவை செய்யும் அமைச்சர் அதனால் தான் மில் குடியேற்ற அமைச்சராக இருந்த போது விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் அகதி முகாம்களில் இருந்த போது இறுதி யுத்தத்தில் வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களை முதலில் குடியேற்ற நடவடிக்கை எடுத்தார் அமைச்சர் அந்த நன்றிக்கடன் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.
சபையில் இருந்து வெளிநடப்பு செய்து எதிர்ப்பு என காட்டி தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அபிவிருத்திகளை தடுக்காமல் இணைந்து மக்களுக்கு சேவை செய்யும் நிலைக்கு தமிழ் கூட்டமைப்பு வருவதையே வன்னி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் விரும்புகிறார்கள் இதை இனியாவது புரிந்து நடக்குமா அய்யா சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர்...