பிரமிளா பிரதீபனின் 'கட்டுபொல' நாவல் அறிமுக விழா



2017 கொடகே கையெழுத்துப் பிரதிப் போட்டியில் பரிசு பெற்ற கொடகே வெளியீடான பிரமிளா பிரதீபனின் கட்டுபொல நாவல் அறிமுக விழா எதிர்வரும்13.05.2018 ஞாயிறு பி.ப. 4.30. கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில், இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் முன்னிலையில் நடைபெற்றது.இவ்விழாவுக்கு அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்கள் தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு பிரதியினை இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் அவர்களிடமிருந்து மலையகக்கல்வி. அபிவிருத்தி மன்ற செயலாளர் வ, பெற்றுக் கொள்வார்

நிகழ்ச்சித் தொகுப்புரையும்-வரவேற்புரையையும் சிவனு மனோகரன் நிகழ்த்தினார்.கருத்துரைகனை பேராசிரியர் துரை மனோகரன், எழுத்தாளர் மு.சிவலிங்கம் ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள். மற்றும் ‘ஞானம்’ டாக்டர் தி. ஞானசேகரனும் வாழ்த்துரையை . கே.பொன்னுத்துரை முன் வைத்தார். சிறப்புரையை மேமன்கவி நிகழ்த்தினார்..
இந்த நிகழ்வின் விசேட அம்சமாக குறிப்பிடுவது என்றால் பிரமீளா பிரதூபன் எழுதிய கட்டுபொல் நாவலில் கட்உபொல் பயிர் செய்கை மேற்கொள்ள்ப்படும் பகுதி பாடசாலை மாணவிகளான எஸ்.அனுஜா, டி.தர்ஷினி உரையாற்றியதையும், அவர்தம் உரைகளில் தம் பெற்றோர் மற்றும் தாம் பகுதி மக்கள் கட்டுபொல் பயிர் செய்கையால் படும் துயரங்களை இன்னல்களையும் கண்ணீர் மல்க கூறியது அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர் சகலரதும் மனங்களை கலங்க வைத்தது

ஏற்புரையையும் நன்றியுரையும் நூலாசிரியை பிரமிளா பிரதீபன் முன் வைத்தார்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -