ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் யாழ் கிளைத்தலைவரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமாகிய கே.எம்.நிலாம் ( நியாஸ்) தனது முதல் மாதச் சம்பளத்தில் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்.
நேற்று(11) மாலை அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் வீட்டிற்கு திடிரென சென்று அக்குடும்பத்திற்கு தனது ஆறுதலை கூறிய பின்னர் கைதியின் பிள்ளைகளை தனது வாகனத்தில் ஏற்றி கிளிநொச்சி நகர்ப்புற கடைகளுக்கு அழைத்துச் சென்று அப் பிள்ளைகள் தாம் விரும்பி கைகாட்டியவற்றை தன் பிள்ளைகள் போல் எண்ணி வாங்கிக் கொடுத்ததுடன் மேலதிமாக வீட்டில் கல்வி கற்பதற்கான தளபாடங்கள் கைதியின் மகள் சங்கீதா ஆசைப்பட்டுக்கேட்ட பாடசாலைக்குச் செல்ல துவிச்சக்கர வண்டி மற்றும் பாதணிகள் வீட்டில் அணிவதற்கான ஆடைகள் என்பனவற்றை வாங்கி கொடுத்த்துள்ளார்.
மேலும் அப்பிள்ளைகளிடம் தந்தையின் விடுதலைக்காக இறைவனைப் பிரார்த்திப்பதுடன் இது தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியூதினூடாக உங்கள் தந்தையின் விடுதலைக்காக பேசுவதாக உறுதி அளித்துள்ளார்.