காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தின் சித்திரக் கண்காட்சி! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்பு

காத்தான்குடி அல் - அமீன் வித்தியாலயத்தின் மாணவர்களது திறன்களை வெளிப்படுத்தும் சித்திரக் கண்காட்சி நேற்று திங்கட்கிழமை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அல் - அமீன் வித்தியாலய அதிபர் எம்.எம். கலாவுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பித்தார். அத்துடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான கே.எல்.பரீட் ஜே.பி., வலையக் கல்விப் பணிப்பாளர் பதுர்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கண்காட்சியை ஆரம்பித்து வைத்து அதனை முழுமையாக பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆசிரியை திருமதி. ஹைறியா நஜிமுடீன் தனது கையால் வரைந்த இராஜாங்க அமைச்சரது ஓவியமொன்றை இதன்போது வழங்கி வைத்தார்.
பின்னர், பாடசாலை அபிவிருத்தி மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடிய இராஜாங்க அமைச்சர், ஏற்கனவே அல் அமீன் வித்தியாலயத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக கடந்த மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 3 மில்லியன் ரூபா நிதியில் மேற்கொள்ளப்படுகின்ற கட்டிட நிர்மாணப் பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -