ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

க.கிஷாந்தன்-
ம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியாவத்தை பலாகுடமாக்க பகுதியில் நான்கு நாட்களுக்கு முன் காணாமல்போன 79 வயதுடைய ஒருவர் 14.05.2018 அன்று காலை 10 மணியளவில் அப்பகுதியில் அமைந்துள்ள ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பளை மரியாவத்தை பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.எம்.ஜெயசேன வயது 79 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆற்றில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த கம்பளை பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

நான்கு நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்ற இவரை உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளனர். அதன்பின் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இவர் 14.05.2018 அன்று இவ்வாறு ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா தற்கொலையா என பலகோணங்களில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -