இன்று வவுனியாவில் திறந்து வைக்கப்பட்ட பாரம்பரிய உற்பத்திப் பொருட்களின் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது கல்வியில் வளர்ச்சி கண்டிருந்த வன்னி மாணவ சமூகம் நடந்து முடிந்த கொடிய யுத்தத்தில் படுமோசமாகப் பாதிக்கப்பட்டதுடன் அவர்களது கல்வியும் முற்றாக இழக்கப்பட்டுள்ளது,
இந்த நிலையில் வன்னிமாவட்ட மாணவர்களின் கல்வி மேம்பாடடைய நாம் கடினமாக உழைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
பெற்றோர இழந்து உறவுகளை இழந்து வாழ்வாதாரத்திற்கான வழிவகைகள் ஏதுமின்றி துன்பச் சுமைகளுடன் தமது வாழ்வையோட்டி வரும் குடுபங்களிலிருந்து எதிர்காலம் மீது நம்பிக்கையற்ற வகையில் தான் எமது மன்னார் முல்லைத்தீவு மற்றும் வவுனியாவைச் சேர்ந்த மாணவச் செல்வங்களை் தமது கல்வியினைத் தொடருகின்றனர்.
இவர்களது எதிர்காலத்தை கட்டியெழுப்பவேண்டிய தேவை எமக்கிருக்கிறது.
எமது பகுதிகளின் அபிவிருத்திகளை பற்றிச் சிந்திக்கின்ற பொழுது இந்த மாணவர்களது எதிர்காலத்தை ஒளிமயமாக்க வேண்டிய தேவையும் மிக முக்கியமானதொன்றாக இருக்கின்றது
எமது மாணவர்களது கல்வி முன்னேற்றம் மூலமே நாம் எதிபார்த்திருக்கும் அந்த அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ளமுடியும் இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு எமது பிரதேசத்தில் வதியும் மாணவ மாணவிகளின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்த உயர்கல்வி அமைச்சரான நீங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என நான் நம்புகிறேன். எனவும் குறிப்பிட்டார்.
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உயர்கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வவுனியா அரச அதிபர் சோமரட்ன விதான பத்திரண உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.