முன்னாள் உயா் நீதிமன்ற நீதிபதி யூ.எல்.அப்துல் மஜீத் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் கலாநிதி பட்டம் பெறுகின்றாா்.


அஷ்ரப் ஏ சமத்-
ய்வு பெற்ற உயா் நீதிமன்ற நீதிபதியும் தற்போது வக்பு ரிபுனல் நீதிமன்றத்தின் தலைவருமான யு.எல் .அப்துல்

மஜீத் கொழும்பு பல்கலைக்கழகத்தின் அவருடைய A COMMENTARY ON CIVIL PROCEDURE CODE AND CIVIL LAW IN SRI LANKA’

Volume I and II. என்ற தொகுதி இரு நுால்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தத்துவத்துறையில் கலாநிதிப் பட்டத்தினை வழங்கியுள்ளது.ஒய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அப்துல் மஜித் தற்பொழுது வக்கு சபையின் கீழ் உள்ள வக்பு ரிபுனல் நீதிமன்றத்தின் தலைவராக கடந்த 2013ஆண்டிலிருந்து கடமையாற்றி வருகின்றாா். 2012, 2013 ஆம் ஆண்டுகளில் இவ் இரண்டு நுால்கலான இலங்கையின் சிவில் வழக்காடுகளும் சிவில் சட்டம் எனும் நுாற்
தொகுதிகளை வெளியிட்டிருந்தாா். மேலும் இந் நுால்கள் சில சிவில் வழக்குகள் சம்பந்தமாக திருத்தியமைக்கப்பட்டு மீளவும் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

நீதிபதி மஜீத் அவா்கள் 1971களில் சட்டக்கல்லுாாியின் சட்டப் பரீட்சையில் சிறப்பு பட்டம் பெற்று கிழக்கு மாகணாம் குறிப்பாக கல்முனை போன்ற பிரதேசங்களில் வழக்கறிஞராக பணியாற்றினாா். அதன் பின் 1985 அக்டோபா் 1ஆம ்திகதி கல்முனை நிதிபதியாக நியமிக்கப்பட்டு மாவட்ட நீதிபதியாக கல்முனை, மன்னாா்,

அமப்பாறை, வலசமுல்ல, காலி, கொழும்பு போன்ற நீதிமன்றங்களில் கடமையாற்றினாா். 1996ல் இவா் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இரண்டு மாகாணங்களில் உள்ள உயா் நீதிமன்றங்களின் சிரேஸ்ட உயா் நீதிபதியாகவும் கொழும்பில் கடமையாற்றிக் கொண்டிருக்கையில் 2001ல் திடிரென ஏற்பட்ட காா் விபத்தில் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றாா்.

இவரது சட்டம் பற்றிய ஆக்கங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இலங்கையில் வெளிவரும் சட்டத்தரணிகள் சங்கத்தின் மாதாந்த சஞ்சிகை, மீசான், நீதிமுரசு, முஸ்லிம் மஜ்லிஸ் போன்ற சஞ்சிகைகளிலும் தேசிய

பத்திரிகைகளிலும் தொடா்ந்தும் ஆக்கங்கள் வெளிவருகின்றன. அத்துடன் அவா் சட்டம் பற்றி மூன்று நுால்கள் வெளிவந்துள்ளன. அத்துடன் அவா் எழுதிய சிவில் சட்டம் பற்றிய தொகுதி 1 இலங்கையில்

மட்டுமல்ல இந்தியா, அமேரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சட்ட நுாலகங்களிலும் உசாா்துனை பகுதியில் வைக்ப்பட்டுள்ளன. அத்துடன் கொழும்பில் உள்ள அல் முஸ்தபா பல்கலைக்கழகத்திலும் சட்ட
விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றதோடு கடந்த 15 வருடங்களாக வக்பு ரிபுனல் தலைவராக பணியாற்றி வருவதையும் குறிப்பிடத்தக்கது,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -