கலப்பட நகையை விற்பனை செய்ததாக புதிது இணையதளத்தில் வெளியாகிய செய்திக்கான குறித்த நகைக்கடையின் விளக்கம்.


முபாரிஸ் எம்.ஹனிபா-
டந்த மே 17 அன்று புதிது இணைய செய்தித்தளத்தில் வெளியாகிய “கலப்பட நகை விற்பனை” செய்தி தொடர்பாக குறித்த வியாபார நிறுவனம் வெளியிட்டுள்ள மறுப்பறிக்கை வருமாறு;

சிலோன் ஜுவல் ஹவுஸ் எனும் எமது நிறுவனம் கடந்த 20 வருடங்களாக வாடிக்கையாளர் நன்மதிப்பை பெற்று மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டுவருகிறது. அல்லாஹ் போதுமானவன்.

கடந்த 2018-05-17ம் திகதி எமது நிறுவனத்தைப் பற்றி புதிது இணையதளத்திலும், அதனைத் தொடர்ந்து முகநூல் வாயிலாகவும் வெளியாகிய கசப்பான செய்தி மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியிருந்தது.

சகோதரர் முனாஸ் என்பவர் குறிப்பிட்டது போலல்லாது அவர் கொண்டுவந்த பொருளுக்கும், பற்றுச்சீட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.

2012ம் ஆண்டு தங்கத்தின் பெறுமதி மிக உச்ச கட்டத்தில் இருந்தது. 22Kt – 62,000/= ஆகவும், KDM – 56,000/= ஆகவும் இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் எந்த மாற்றமும் இல்லை.

சகோதரர் முனாஸ் காட்டிய பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது “KDM தோடு”வகையைச் சேர்ந்தது. ஆனால் சகோதரர் முனாஸ் கொண்டுவந்து காட்டிய பொருள் “கராப்பு” வகையைச் சேர்ந்தது. இது குறித்த செய்தியை பார்த்த நகை வியாபாரம் செய்யும் எல்லோருக்கும் புரியக்கூடிய விடயம்.

பற்றுச்சீட்டில் போடப்பட்ட நிறை 2க்கு 350 குறைய. அதாவது 1*650. அவர் கடைக்கு எடுத்து வந்த கராப்பின் நிறை 1*180. அதன் இன்றைய பெறுமதி 5000/= ஆகும். பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்ட KDM தோட்டின் இன்றைய பெறுமதி 4500g முடிய 1*650 – 9900/=. இதனடிப்படையிலேயே அவர் எடுத்து வந்த கராப்பின் பெறுமதியை 5000/= எனக் கேட்டோம்.

இதலனே தான் பற்றுச்சீட்டிற்கு உரிய பொருள் கண்டிப்பாக இது இருக்க முடியாது என்பதில் எமது நிறுவனம் மிகத்தெளிவாக இருக்கிறது.

எமது நிறுவனத்தில் இந்த ஆறு வருடத்திற்குள் எட்டுப்பேர் சேல்ஸ்மேன்களாக நின்று விலகியுள்ளனர். எமது நிறுவனத்தின் முதலாளியின் கட்டளை “வாடிக்கையாளர் எடுத்த பொருளின் லேபலில் (Label) உள்ள நிறையை வாடிக்கையாளரிடம் நிறுத்துக் காட்டாமல் பற்றுச்சீட்டில் பதியப்படக் கூடாது” என்று. அதனால் நிறையில் எந்தத் தவறும் வர வாய்ப்பிருக்காது. ஆகையால், திட்டமாகச் சொல்கிறோம் பற்றுச்சீட்டு தான் மாறுபட்டிருக்கும். நிச்சயமாக, சத்தியமாகச் சொல்கின்றோம் இந்தப் பொருளுக்கும் பில்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் போதுமானவன்.

பற்றுச்சீட்டு காணாமல் போய் பின் தேடி எடுக்கப்பட்டதாக சகோதரர் முனாஸ் அவரே குறித்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் பற்றுச்சீட்டு மாறுபட்டிருக்க அதீக வாய்ப்புண்டு என்பதனை உணரமுடியும்.

ஆகவே மேலே நாம் சொல்லும் காரணிகளை வைத்து பார்க்கும் போது பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளுக்கும் கொண்டுவந்த பொருளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது அப்பட்டமாக புலனாகிறது.
மேலும் குறித்த மே 17 தினத்தன்றே பிரிதொரு நபரிடம் அதே பொருளைக்கொடுத்து நாங்கள் முன்மொழிந்த 5000/= ஆவது தாருங்கள் என சகோதரர் முனாஸ் கேட்டு அனுப்பியிருந்ததுவும் இங்கே குறிப்பிடத்தக்கது.

யதார்த்தம் இப்படியிருக்க உண்மைக்கு புறம்பாக சகோதரர் முனாஸ் அவர்கள் வெளியிட்ட செய்தியால் எமது நிறுவனத்தின் நற்பெயருக்கு பெரிதும் கலங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவரின் பக்கம் நியாயம் இருந்திருந்தால் பொலிஸில் முறைப்பாடு செய்து இவருக்கான நீதியை பெற்றிருக்கலாம். இவர் இதுவரையும் முறைப்பாடு செய்யாமல் வெறுமனே இணையதளத்திலும், முகநூலிலும் செய்தியை பதிவிட்டதிலிருந்து இவரின் நோக்கம் எமது நிறுவனத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதே என்பது தெளிவாக புலனாகிறது.

இவருக்கெதிராக சட்ட நடவடிக்கையை எடுப்பற்கு 22-05-2018 அன்று கல்முனை பொலிஸில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை நிச்சயம் வென்றே தீரும். இன்ஷா அல்லாஹ்!

குறிப்பு: குறிப்பிட்ட பொருள் எமது கடையில் விற்கவில்லை என்பதில் எமது நிருவனம் மிகவும் உறுதியாகவுள்ளது. காரணம் பொருட்களின் தரத்தை பேணுவதில் எமது நிருவனம் கண்டிப்பாக இருக்கின்றதென்பதை உறுதியாக இருக்கின்றது காரணம் பொருட்களின் தரம் தொடர்பில் எந்த வாடிக்கையாளர்களும் எந்த முறைப்பாடும் இதுவரைக்கும் முன்வைத்ததில்லை என்பதனையும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம்.

- உரிமையாளர்,
சிலோன் ஜுவல் ஹவுஸ்.

புதிது செய்தித்தளம் வெளியாக்கிய குறித்த செய்திக்கு http://puthithu.com/?p=33060

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -