மீண்டும் கல்குடாவிற்கு கடற்றொழில் மீன் பிடி நீரியல் வள அபிவிருத்தி பிரதி அமைச்சு கிடைத்துள்ளமை கெளரவத்துக்குறிய விடயமாகும். வாழ்த்து செய்தியில் சாட்டோ மன்சூர்.


ஓட்டமாவடி அஹமெட் இர்ஷாட்-
ன்று புதன் கிழமை 02.05.2018 இடம் பெற்ற புதிய அமைச்சரவை மாற்றத்தில் இரண்டாம் கட்டமாக இடம் பெற்ற பிரதி அமைச்சர்களுக்கான மாற்றத்தில் கல்குடாவில் முதலாவது பிரதி அமைச்சிக்கு சொந்தக்காரனான மர்ஹும் மொஹைதீன் அப்துல் காதர் வகித்த கடற்றொழில் நீரியல் வள மீன்பிடி பிரதி அமைச்சுக்கு பிற்பாடு மீண்டும் கல்குடாவிற்கு அரசியல் தலைமையான அல்-ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு கிராமிய பொருளாதார பிரதி அமைச்சுடன் சேர்த்து கடற்றொழில் நீரியவள மீன்பிடி அபிவிருத்தி பிரதி அமைச்சும் கிடைத்துள்ளமையானது பிரதி அமைச்சர் அமீர் அலியையும் கல்குடா மக்களையும் அரசாங்கம் கெளரவப்படுத்தியிருக்கும் செயலாகவே பார்க்கின்றேன் என பிரதி அமைச்சர் அமீர் அலியின் தீவிர அரசியல் செயற்பாட்டாளரும் சாட்டோ இணையத்தளத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான வை.எல்.மன்சூர் தனது வாழ்த்து செய்தியில் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தனது வாழ்த்து செய்தியில் மன்சூர் தெரிவித்துள்ளமையானது... முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கத்தில் கடற்றொழில் நீரியல்வள மீன்பிடி அமைச்சராக இருந்த பொழுது கல்குடாவின் வரலாற்றில் முதலாவது பிரதி அமைச்சினை குறித்த அமைச்சில் பெற்று வந்த மர்ஹும் மொஹைதீன் அப்துல் காதர் தான் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக இருந்த காலத்தில் கேட்பார் பாற்பார் அற்ற நிலையில் காடாக கிடந்த காணியினை செப்பனிட்டு இன்று ஓட்டமாவடியில் முக்கிய பேசும் பொருளாக இருக்கின்ற அமீர் அலி விளையாட்டு மைத்தானத்தினை உருவாக்கினார். அதற்கு பிற்பாடு கல்குடா அரசியல் தலைமையினை பெற்றுக்கொண்ட தற்போதைய பிரதி அமைச்சர் அமீர் அலி தனது நூறு வீத பக்களிப்புடன் அம் மைதானத்தினை அபிவிருத்தி செய்து இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற முக்கியமான மைதானங்களில் ஒன்றாக நவீன மயப்படுத்தி வருகின்றார்.

அதே போல் ஓர் அரசியல் தலைமை முன்னெடுத்த விடயங்களை பின்னுக்கு வருகின்ற அரசியல் தலைமைகள் சிறந்த முறையில் எதிர் கால சந்ததியினருக்காக திறம்பட அபிவிருத்தி செய்து முடித்து வைக்கும் என்ற வகையில் முதலாவது கல்குடாவின் கடற்றொழில் நீரியல் வள மீன்பிடி பிரதி அமைச்சராக இருந்த மர்ஹும் மொஹைதீன் அப்துல் காதர் விட்ட குறைபாடுகளை கல்குடாவில் செய்து முடிப்பதற்கு தற்பொழுது குறித்த கடற்றொழில் நீரியல்வள மீன்பிடி பிரதி அமைச்சினை பெற்றிருக்கும் அமீர் அலிக்கு கிடைத்துள்ள மாபெரும் சந்தர்ப்பமாக நான் பார்ப்பதோடு அதனை அவர் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது.

அத்தோடு முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக கருத்தபட்டும் மீன் பிடி தொழிலையே பிரதானமாக கொண்ட கிராமமாகவும் கருதப்படுகின்ற வாழைச்சேனை மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளையும்இ அவர்களுடைய வாழ்வாதரத்தினை மேம்படுத்துவதற்காக மீன்பிடி துறைக்கு தேவையான நவீன செயற்திட்டங்களையும்இ இன்ன பிற குறைபாடுகளையும் அரசியல் வேறு பாடுகளுக்கு அப்பால் தற்பொழுது கிடைக்க பெற்றுள்ள புதிய பிரதி அமைச்சின் மூலம் அமீர் அலி செய்து காட்டுவதற்கும் - மீண்டும் ஒட்டு மொத்த கல்குடாவும் அமீர் அலியின் அரசியல் கோட்டை என்பதனை நிரூபிப்பதற்கும் இது நல்லதொரு சந்தர்ப்பம் என்பதனையும் நான் இந்த வாழ்த்து செய்தியில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக வரலாற்றில் என்றும் இல்லாதவாறு அம்பாறை மாவட்டத்தில் தனது செல்வாக்கினை அதிகரித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரசானது அம்பாறை மாவட்ட கரையோர தொழிலாளர்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலியின் மூலம் கிடைத்துள்ள புதிய பிரதி அமைச்சினை வைத்து பாரிய அபிவிருத்திகளையும்இ அம்மக்களுக்கு தேவையான வாழ்வாதார உதவிகளையும் செய்து கொடுப்பதற்கு கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பத்திற்கு அப்பால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையும் தனது அரசியல் கோட்டை என்பதனை நிரூபிப்பதற்கு கிடைத்துள்ள அடுத்த சந்தர்ப்பமாகும்.

இவைகள் இவ்வாறு இருக்க கல்குடா- ஓட்டமாவடி பிரதேச சபை நிருவாக எல்லைக்குள் உட்பட்ட வாகனேரி குளத்தில் காலாகாலமாக நன்நீர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட வந்த முள்ளிவட்டவான் மக்கள் மீன் பிடிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளுக்கு ஓர் நிரந்த தீர்வினை அரசியல் ரீதியாக நியாயமான முறையில் பெற்றுக்கொடுப்பதற்கு கிடைத்துள்ள முக்கிய சந்தர்ப்பமகவும்இ குறித்த முள்ளிவட்டவான் மக்களுடைய பிரச்சனை விடயத்தில் அதிகாரமற்ற சில அரசியல்வாதிகள் என கூறிக்கொள்பவர்கள் பூச்சாண்டி காட்டும் விளையாட்டுகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் செயலாகவும் இந்த சந்தர்ப்பத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்பதனை நான் எதிர்பார்க்கின்றேன்.

கடைசியாக. கிராமிய பொருளாதர பிரதி அமைச்சோடு மீண்டும் கடற்றொழில் நீரியல்வள மின்பிடி பிரதி அமைச்சினை பொறுப்பெடுத்துள்ள கல்குடாவின் அரசியல் தலைமை அமீர் அலி வரலாற்றில் நான்கு தடவைகள் அணர்த்த சேவைகள் பிரதி அமைச்சர்இ சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர்இ கிராமிய பொருளாதர பிரதி அமைச்சர்இ கடற்றொழில் நீரியல்வள மீன்பிடி பிரதி அமைச்சு எனும் பதவிகளை பெற்றுள்ளதோடு இரண்டு முறைகள் வெற்றியடைந்து பாராளுமன்றம் சென்றமைஇ ஒரு முறை தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற சென்றமைஇ கிழக்கு மாகாண சபை உறுப்பினர்இ அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர் போன்ற அவர் வகித்த உயரிய அரசியல் பதவிகள் அவருடைய அரசியல் முதிர்சிக்கும் சானக்கியத்திற்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்.

ஆகவே கல்குடாவின் வரலாற்றில் மட்டுமல்லாது மட்டக்களப்பு மாவட்டத்திலேயே முன்னாள் அமைச்சர் அமரர் தேவநாயகம் மற்றும் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத்திற்கு பிற்பாடு அமைச்சரவை அந்தஸ்துள்ள (கெபினட்) அமைச்சராக அமீர் அலி வர வேண்டும் என இந்த நாளில் நான் அவரை உள்ளத்தால் வாழ்த்துகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -