இந்த புனித ரமழான் மாதத்தில் நாங்கள் முன் செய்த பாவங்களுக்கு அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்வர்களாக மிகவும் ஒற்றுமையாக வாழக்கூடிய இந்த தருனத்தில் எங்களுக்கிடையில் ஏற்பட்ட பழைய கசப்புணர்வுகளை மறந்து இலங்கை வாழ் முஸ்லிம்களின் எதிர் கால நிம்மதியான வாழ்க்கையினை கருத்தில் கொண்டு முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைமையான அப்துர் றவூஃப் கிபத்துல் ஹக்கீமுடன் கைகோர்த்து செயற்பட ஒற்றுமைபடுமாறு சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கின்றார்
மேலும் தனது அறிக்கையில் உதுமான் கண்டு நாபீர் தெரிவித்துள்ளமையானது…..`
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள், துயரங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக பல கோணக்களில் இருந்து தொடுக்கப்படுகின்ற இனவாத செயற்பாடுகள் என பல தரப்பட்ட பிரச்சனைகளை பற்றி எல்லோரும் அறிந்தவர்களாகவே இருக்கின்றோம். ஆகவே அரசியல் ரீதியாக எங்களுக்குள்ளே நாங்கள் பிரிவுபட்டு அழித்துக்கொள்ளாமல் இந்த புனித மாதத்தில் ஒற்றுமை எனும் கயிற்றினை பற்றிப்பிடித்தவர்களாக ஒரு சரியான முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் ஒருமித்து செயற்பட வேண்டிய கட்டாய நிலையில் நாம் எல்லோரும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய நிலிக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
அந்த வகையில் சகல அரசியல் பகமைகளையும் மறந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தின் கீழ் அந்த கட்சியினூடாக சகலரும் ஒற்றுமைப்பட்டு ஒன்று சேர்வதன் மூலமாகவே எமது உரிமைகளையும், எல்லை நிர்ணையத்தினூடக நியாயமான எமது இருப்பிடத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை நாபீர் பெளண்டேசன் மக்களுக்கு தெரிவித்துகொள்ள விரும்புகின்றது.
ஆகவே முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற சகல கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் குழுக்களை சார்ந்தவர்கள் அனைவரும் அடிப்படை கொள்கை ரீதியான வேறுபாடுகள், பகமைகளை எல்லாம் புறம்தள்ளி வைத்து விட்டு முஸ்லிம் காங்கிரசின் தலைமையோடு கைகோர்த்து எமது முஸ்லிம் மக்களுடைய அடிப்படை அபிலாசைகளை அரசியல் ரீதியாக நியாயமான முறையில் அடைந்து கொள்வதற்கு இந்த ரமழான் மாததில் ஒன்று சேருமாறும் அதற்காக நாபீர் பெளண்டேசன் அல்லாஹ்விடத்தில் மன்றாடுவதாகவும் மேலும் மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கின்றது நாபீர் பெளண்டேன்.