2015ம் ஆண்டுக்கு முன்னரான மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்துக் கொண்ட சம்பவங்கள் சில நடந்திருக்கின்றன. அவற்றில் முதன்மையாகக் கருதப்படுவது முப்பது வருட கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. மற்றையது முஸ்லிம்களுக்கெதிராக நிகழ்ந்த இனவாதிகளின் அட்டூழியங்களைத் தடுப்பதற்கான போதிய முயற்சிகளைச் செய்யாமல் இருந்தது.
தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டுவந்த ஆயுதப் போராட்டத்தை அடக்கி, அடியோடு முடித்து வைத்தமைக்காக இலங்கைப் பெரும்பான்மையினர் மத்தியில் மகிந்த ஒரு மா மன்னனாகப் போற்றப்பட்ட அதேவேளை, அந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட அப்பாவிகளான தமது உறவுகளையெண்ணி, மகிந்த ராஜபக்ஷவைத் தமிழ் மக்கள் ஓர் அரக்கனென வர்ணித்துத் தூற்றினர். இவையிரண்டிற்குமிடையே நின்ற முஸ்லிம் சமூகம் யுத்தம் முடிவடைந்ததால் நிம்மதியும், எவ்விதக் குற்றங்களும் புரியாத சாதாரண தமிழ் மக்கள் கொல்லப்பட்டதனால் உள்ளூர வருத்தமும் அடைந்தது.
யுத்த வெற்றியின் பின்னர் சிங்கள இனவாத இயக்கங்கள் ஆங்காங்கே காளான்கள் போல முளைத்துக் கிளம்பின. முப்பது வருடங்களாகக் காத்திருந்தவை போல முஸ்லிம்கள் மீது அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிட்டன. ஹலால்--பர்தா-அபாயா-என்பவற்றுக்கெதிராக எதிர்ப்புக் கோஷங்களையெழுப்பின. பல பள்ளிவாசல்களின் மீது தாக்குதல்களை நடத்தின. பன்றியிறைச்சியை இரத்தத்துடன் பள்ளிகளுக்குள் வீசின. ஆங்காங்கே முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தீக்கிரையாக்கின. எல்லாவற்றிற்கும் மேலாக அளுத்கம-தர்கா நகரில் வெறியாட்டமாடி, வீடுகளை எரித்து, உடைமைகளை அழித்து, இரண்டு அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களையும் காவு கொண்டன.

இவையத்தனையையும் அன்றைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார் என்று முஸ்லிம் சமூகம் கருதியது. மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தம்பியும் அன்றைய பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவருமே முஸ்லிம்களுக்கெதிராக இயங்கும் இனவாத சிங்கள பௌத்த குழுக்களைத் தோற்றுவித்து வழி நடத்துகிறார்கள் என்று திடமாக நம்பியது. இதனால் அடுத்து வந்த தேர்தலில் மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமெனத் திடசங்கற்பம் பூண்டது. அந்தத் திடசங்கற்பத்தைச் செயலிலும் காட்டி, மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகவும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது.
மஹிந்தவைத் தோற்கடித்து, மைத்திரியின் கூட்டரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த சில நாட்களுக்குள்ளாகவே, 'தவறிழைத்து விட்டோமோ?' என்று கைசேதப்படுகின்ற அளவுக்கு முஸ்லிம் சமூகம் மீண்டும் வருந்தத் தொடங்கிவிட்டது. எந்த சிங்கள, பௌத்த, இனவாதக் கும்பல்களும் காவிகளும் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் முஸ்லிம்களுக்கெதிரான அட்டூழியங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்களோ அதே கும்பலும் காவிகளும் முஸ்லிம்களாகிய நாமே கொண்டு வந்த இந்த நல்லாட்சியில் முன்னரை விடச் சுதந்திரமாகவும் அரச ஆசீர்வாதங்களோடும், பலத்த பாதுகாப்புகளோடும் சலுகைகளோடும் நமக்கெதிரான வன்முறைகளையும் கொடுமைகளையும் தங்குதடையின்றிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் மிக்க கவலையோடும் மிகுந்த கோபத்தோடும் இங்கே ஓர் உண்மையை எவ்விதக் காழ்ப்புணர்வுகளுமின்றி, அரசியல் பேதங்களுக்கப்பால் நின்று ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான், கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்களுக்கெதிராக நிகழ்ந்த கொடுமைகளின் அளவைவிட இருநூறு சத விகிதம் அதிகமாகவே இந்த நல்லாட்சியில் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன; நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையாகும்.
மகிந்த காலத்து ஆட்சியில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளுக்குப் பின்னணியில் உண்மையாகவே யார் யாரெல்லாம் இருந்தார்களென்ற உண்மை இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. ராஜித சேனாரத்னவின் பெயரும் சம்பிக்க ரணவக்கவின் பெயரும் பல ஆதாரங்களோடு முன்வைக்கப்படுகின்றன. ஆயினும், ஓர் அரசாங்கமென்ற ரீதியில் மகிந்தவும் கோத்தபாயவும் அதனைக் கண்டும் காணாதிருந்தது ஏன் என்ற நியாயமான கேள்வியும் எழாமலில்லை.
முஸ்லிம்களுக்கெதிரான கடந்த கால ஆட்சியின் உச்சக்கட்டமாக நடைபெற்ற அளுத்கம கலவரம் முடிந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே மகிந்தவை நாம் தோற்கடித்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டோம். உண்மையில் அந்தக் கலவரத்துக்கும் அதற்கு முன்னதான திட்டமிடப்பட்ட அட்டூழியங்களுக்கும் பின்னணியிலிருந்த கர்த்தாக்கள் யார் என்று கண்டுபிடிக்கும் கால அவகாசம் மகிந்த அரசாங்கத்திற்குக் கிட்டாததை ஒரு காரணமாக இங்கு முன்வைக்கலாம்.

சரி...எது எப்படியோ, இன்று நமது முன்னுள்ள இரு பெரும் கேள்வி இதுதான். நூறு முறை நம்மைத் தாக்கிய ஒருவரா, ஆயிரம் முறை நம்மைத் தாக்கிய ஒருவரா மோசமானவர்? இந்த இருவரில் யாரை நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், பொதுத்தேர்தலில் ஆதரிக்கப் போகிறோம்?
மகிந்தவும் கோத்தாவும் நாமலும் பசிலும் கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த கொடுமைகளுக்காக இன்று வருந்தி, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் நிலைமை காணப்படுகிறது. இன்னுமொரு முறை தாம் ஆட்சிக்கு வந்தால் அத்தகைய கொடுமைகளெதுவும் நிகழாமல் முஸ்லிம்கள் பாதுகாப்போடும் நிம்மதியோடும் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென்ற வாக்குறுதிகளை அவர்கள் பகிரங்கமாகக் கூறி வருகிறார்கள். மறுபக்கம் சிங்கள மக்களின் ஆதரவும் மகிந்த, கோத்தாவுக்குப் பன்மடங்கு பெருகி வருகிறது. கடந்த உள்ளூராட்சித் தேர்தல் இதற்கு தக்க சாட்சி.
இன்னுமொரு விடயத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நிலையற்ற இந்த அரசாங்கம் அடுத்த தேர்தல்களில் பல்வேறு துண்டுகளாக உடைந்து சிதறிச் சின்னாபின்னமாகி மகிந்த, கோத்தாவிடம் மண் கவ்வுமென்பதை யதார்த்தம் புரிந்த எவரும் மறுக்க மாட்டார்கள். ஆக, நாம் யாரைத் தெரிவு செய்வது?
இந்த இரு தரப்பாரையும் விடுத்து, மூன்றாவதொரு சக்தி முன்னணிக்கு வந்து, ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றுமென்பதெல்லாம் வெறும் பகற் கனவு. ஆக, முஸ்லிம் சமூகத்தின் மீது இன்றிருக்கும் தெரிவு இரண்டுதான். ஒன்று மகிந்த சார்ந்த அணி. அல்லது, மைத்திரியோ, ரணிலோ அல்லது இருவருமோ சார்ந்த அணி. இந்த அணிகளில் நாம் யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றோம்?
முறையான பேச்சுவார்த்தைகளுடன், உறுதியான ஒப்பந்தங்களுடன், மீறமுடியாத வாக்குறுதிகளுடன் மீண்டும் ஒரு முறை மகிந்த ராஜபக்ஷவுக்கோ, அல்லது அவர் கைகாட்டும் ஒருவருக்கோ ஒரு வாய்ப்பை வழங்கிப் பார்க்கலாமென்றே தோன்றுகிறது. அவ்வாறு நாம் ஆதரவு வழங்காது மகிந்த சார்ந்த அணி வெற்றி பெற்றுவிட்டால், அதன் பின்னரான முஸ்லிம்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே குமிழ்ந்தெழும் அச்சமும் நமதிந்த நிலைப்பாட்டிற்கு ஒரு காரணமாகும்!