மரம்சரிந்ததால் நோட்டன் அட்டன் வீதி போக்குவரத்து மூன்று மணித்தியாலம் தடை

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
நோட்டன் அட்டன் பிரதான வீதியில் மரமொன்று சரிந்து வீழ்ந்தமையினால் மூன்று மணித்தியாலங்கள் குறித்த வீதிக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது

நோட்டன் மல்லியப்பு மிட்போட் பகுதியிலே 20.05.2018 கா லை 5.30 மணிமுதல் போக்குவத்து தடைப்பட்டதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்

பாதையோரமிருந்த வாகைமரமே இவ்வாறு பாதையின் குருக்கே சரிந்து வீழ்ந்ததாகவும் பிரதேச வாசிகளின் உதவியுடன் குறித்த மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு 8.30 மணியளவில் போக்குவரத்து வழமைக்கு திருப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் மேலும் அதிகாலைமுதல் அட்டன் லக்ஷபான. நோட்டன். கலவலதெனிய. அங்கராம்பிட்டிய மாரக்க போக்குவரத்து தடைப்பட்டிருந்த நிலையில் மஸ்கெலியா நோட்டன்.மற்றும் தியகல வழியாக அட்டன் மாக்கத்தையும் பயண்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -