மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் நாட்டில் இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ளன ..


மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதியாகபதவியேற்ற பின்னரே நாட்டில் இயற்கை அழிவுகள்அதிகரித்துள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

அம்பலந்தொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள்சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டை பாதுகாத்த ரானுவத்தினர் இன்று தீவிரவாதிகள்ஆகிவிட்டனர்.விடுதலை புலிகள் இன்று ரானுவத்தினர்ஆகிவிட்டனர்.அமைச்சர் ராஜித சேனராத்ன அமைச்சரவைபேச்சாளர் என்பதை மறந்து செயற்படுகிறார்.அவர்அமைச்சரவை பேச்சாளராக வந்த நாள் முதல் இந்த நாட்டைகாட்டிக்கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுவரும்அதேவேளை இனங்களுக்கு இடையே பிணக்குகளை ஏற்படுத்தும் வகையிலும் கருத்து வெளிட்டு வருகிறார்.

அரசியல் தலைவர்கள் அடுத்த தலைவர்களுக்கு பொய்யாக சேறு பூசுவதுவதும் பொய்யான சோடிக்கப்பட்ட கதைகளைகட்டி அவர்களின் பெயர்களுக்கு கலங்கம் ஏற்படுத்துவதும்நல்ல செயற்பாடல்ல.

அன்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்கள்ராஜபக்‌ஷ குடும்பத்தினர் திருடர்கள் என கூறினார். எம்மிடம்தங்க குதிரை,லம்போகினி, ஆடம்பரமாளிகைகள்,ஹெலிகொப்டர் ஆகியவை உள்ளன் எனகூறினார்கள்.அன்று அவ்வாறு கூறிய ஜனாதிபதியின்செயலாளர்கள் இன்று லஞ்சம் பெறும்போது கையும்களவுமாக பிடிபடுகிறார்கள்.

பொய்யாக எமது பெயர்களை களங்கப்படுத்தியவர்களுக்குஇன்று திரும்ப கிடைக்கிறது.நாட்டின் தலைவர் அராஜகமானஒருவராக இருந்தால் அந்த நாடு சீரழிந்துவிடும் நேரத்திற்குமழை பெய்யாது, வெள்ளப்பெருக்கு ஏற்படும், மனிதஉயிர்கள் பலியாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனஅப்போது கூறினார்.தற்போது நாட்டில் என்ன நடக்கிறதுஎன்பதை நாம் கேட்க விரும்புகிறோம்.

இந்த நல்லாசிட்சியிலேயே புத்தாண்டு தினத்தில்மீத்தொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்தது. கடந்தவருடம் வெள்ளம் ஏற்பட்டது,அரநாயக்க மண் சரிவில்நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள்,சாலாவ வெடிப்புசம்பவத்தில் பாரிய அழிவுகள் ஏற்பட்டன.

இன்று பாரிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆனால்இன்று நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என கூறுகிறார்,அதிகமாக மழை பெய்வதன் காரணமாக ஆறுகள்,குளங்கள்,கால்வாய்கள் நிரம்புவாதாக கூறுகிறார்.

தற்போதாவது எம்மீது சேறு பூசுவதை நிறுத்தி மக்களுக்குநன்மை செய்யுமாறு அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -