கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்குட்பட்ட மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையில் லயன்ஸ் கிளப் அனுசரனையுடன் விசேட மருத்துவ முகாம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் திங்கட்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுடீன், பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸ்ஸடீன், டாக்டர் எம்.எம்.மர்சூக் உள்ளிட்டோர் இவ்வைத்திய முகாமில் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர். வைத்தியசாலையின் தலைமை மேற்பார்வை தாதிய உத்தியோகத்தர் யு.எம்.ஏ.ஜின்னா உட்பட தாதியர்கள் மற்றும் ஊழியர்களும் வைத்திய முகாம் பணிகளில் ஈடுபட்டனர்.
இதன்போது சுமார் 700 பேருக்கு நீரிழிவு, குருதி அமுக்கம், கண் பார்வை மற்றும் அங்கவீன குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கான பரிசோதனைகள் வைத்திய நிபுணர்களினால் மேற்கொள்ளப்பட்டதுடன் 40 பேருக்கு செயற்கை கால்களும் 100 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.