பட்டிருப்பு தேசிய பாடசாலையில் புதிய மாணவர்களை சிரேஸ்டமாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு

வ.சக்திவேல் எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ட்டிருப்பு தேசிய பாடசாலை ,களுவாஞ்சிகுடியில் க.பொ.த.உயர்தர கணித ,உயிரியல் மற்றும்தொழில்நுட்ப துறையில் இவ்வருடம் இணைந்து கொண்ட புதிய மாணவர்களை சிரேஸ்டமாணவர்கள் வரவேற்கும் நிகழ்வும் அவர்களுக்கான கற்றல் வழிகாட்டல் ஆலோசனை மற்றும் இந்துமத பிரார்தனையும் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வுகளும் கடந்த புதன்கிழமைபாடசாலை கேட்போர்கூடத்தில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில்இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம வளவாளராக கிழக்கு பல்கலைக்கழக இரசாயனவியல் துறை தலைவர்கலாநிதி எம்.சிதம்பரேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் மாணவர்களின்பெற்றோருக்கும் கற்றலுக்கான வழிகாட்டலும் ஆலோசனையும் வழங்கியதுடன்களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ரீ அங்குசன் அவர்கள்இந்துமதப் பிரார்த்தனையையும் ஆசிர்வாதத்தினையும் வழங்கினார்.

இந்நிகழ்வுகளில் பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன் ,ரீ.ஜனேந்திரராஜா உயர்தர விஞ்ஞானப்பிரிவு பகுதித்தலைவர் எம்.ஜெயாதி, பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் கே.லோகநாதன் ,பழைய மாணவர் சங்க பொருளாளர் எஸ்.உதயனன் ,உயர்தர தொழில்நுட்பவியல் துறை பகுதித்தலைவர் ரீ.ருத்ராஹரன் மற்றும் உயர்தர விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் துறை ஆசிரியர்களும் ,சிரேஸ்ட ஆசிரியர்களும் மாணவர்களும்,மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை பாடசாலை ஆசிரியர் திரு.ரீ.தெய்வீகன் நெறிப்படுத்தியதுடன் உயர்தர விஞ்ஞானத்துறை பௌதீகவியல் ஆசிரியர் கே.கோவண்ணன் நன்றியறிதலையும் மேற்கொண்டார்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -