சூரா கவுன்சிலின் ஏற்பாட்டில் ஜாமியா நளீமியா கலா பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளா் அஷ்ஷேக் எஸ்.எம்.எம் பழீல் எழுதிய இலங்கை மத நல்லிணக்கத்தில் இஸ்லாமிய மத விடயங்கள் சம்பந்தமாக சிங்கள மொழி மூலமான நுால் நேற்று (09) கொழும்பு தாபலக கேட்போா் கூடத்தில் வெளியீடப்பட்டது.
இந் நிகழ்வில் ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளா் எம். ஏ.எம். சுக்ரி, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா், தகவல் திணைக்களத்தின்முன்னாள் பணிப்பாளா் கலாநிதி ரங்கா கலன்சூரிய இஸ்லாமிய மதம் மற்று இலங்கையில் பர்மா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் ஊடக மற்றும் சமுகத்தலங்கள் ஊடாக பொய்யாக பரப்படும் செய்திகள் பற்றி பிரதான உரை நிகழ்த்தினாா். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுகைர் ஆரம்ப உரையையும் , சிங்கள மொழி முலமான இந் நுால் முஸ்லீம்களின் மதங்கள் அவா்கள் கலை கலாச்சார விடயங்களை பௌத்த மக்கள் எழிதாக அறிந்து கொள்ளக் கூடிய வகையில் இந் நுால் மிகவும் பிரயோனப்படும் என பேராதெனிய பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவின் முன்னாள் விரிவுரையாளா் நவரத்தின பண்டா, நுாலசிரியா் அஷ் ஷேக் பழில் தஹ்லான் மன்சூர் ஆகியோறும் உரையாற்றினாா்கள் மேலும் நுாலின் பிரதிகள் சூராகவுன்சிலின் தலைவா் தாரிக் மஹ்மூதுக்கும் ஏனையவா்களுக்கும் இலவசமாக வழங்கி வைக்ப்பட்டது.