அஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..!


அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன்-
ல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திடீரெனெ ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒரு தொகை மருந்துப் பொருட்களும் மருத்துவ உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவு அமைந்துள்ள பிரதான கட்டிடக் தொகுதியின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள இரசாயன களஞ்சியசாலை பகுதியிலேயே தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதன்போது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாப் உள்ளிட்டோரும் ஸ்தலத்திற்கு விரைந்து தீயணைப்பு நடவடிக்கைகளை நெறிப்படுத்தியிருந்தனர்.

தீயணைப்பு நடவடிக்கைகளில் வைத்தியசாலை ஊழியர்களும் பொது மக்களும் பங்களிப்பு வழங்கியிருந்தனர்.

இத்தீபரவலுக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -