"சமூக நல்லிணக்க தலைமைத்துவ பயிற்சி பாசறை"

ல் மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா அமைப்பினர் அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேச, இன பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கியதாக நடாத்திவரும் "சமூக நல்லிணக்க தலைமைத்துவ பயிற்சி பாசறை" 2018-05-22 ஆம் திகதி அல் மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா அமைப்பின் நிகழ்ச்சி திட்டமிடல் பணிப்பாளர் அஹமட் புர்கானின் ஏட்பாட்டில் அல் மீஸான் பௌண்டசன் ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளர் அல்ஹாஜ் நூறுல் ஹுதா உமரின் தலைமையில் கல்முனை கமு/அல்- வஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

800 மாணவர்களை இலக்காக கொண்டு நாடத்தப்பட்டு வரும் இந்த சமூக நல்லிணக்க தலைமைத்துவ பயிற்சி பாசறையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்,முஸ்லிம், கிறிஸ்தவ மாணவ மாணவிகள் 200பேர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், அரசியல் விமர்சகர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.இப்ராஹிம், அல் மீஸான் பௌண்டசன் ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளர் அல்ஹாஜ் நூறுல் ஹுதா உமர் ஆகியோர் விரிவுரையாளர் களாக கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் முஸ்லீம் விவகார தேசிய இணைப்பாளர் சிராஸ் யூனுஸ், சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு வின் இலங்கைகான தூதுவர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா, மற்றும் பல கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

 











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -