= யாழ். கட்டளை தலைமையகம் அறிவிப்பு=
இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் இம்மாவட்டத்தை சேர்ந்த தமிழ் இளையோர்களுக்கு இராணுவம் சாராத, பாதுகாப்பு நடவடிக்கைகளோடு சம்பந்தப்படாத அரசாங்க வேலை வாய்ப்புகள் வருகின்ற வாரங்களில் வழங்கப்பட உள்ளன.இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் வழிகாட்டல், அறிவுறுத்தல் ஆகியவற்றுக்கு அமைய மேசன், தச்சன், பிளம்பர், எலக்ரீசியன், வைண்டர், விவசாயி போன்ற வேலைகளுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளையோர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றார்கள்.
இவை நிரந்தரமான, ஓய்வூதியத்துக்கு உரித்தான வேலைகள் ஆகும். மாதாந்த சம்பளம் மற்றும் படி 50000 ரூபாய்க்கு மேல் கிடைக்க பெறும். வயதெல்லை 28 ஆகும். கல்வி தகைமை அத்தியாவசியம் அல்ல. ஆயினும் தொழில் தகைமைக்கான சான்றிதழை சமர்ப்பிக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றார்கள். அதே நேரத்தில் தொழில் தெரியாதவர்களுக்கும் தொழில் வழங்கப்பட்டு சம்பளம் வழங்கப்படுவதுடன் தொழில் கல்வியும் கற்பித்து கொடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வேலை திட்டம் மூலம் பயன் அடைய விரும்புபவர்கள் மேலதிக விபரங்களுக்கு 0702095920 என்கிற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.