தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரசின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கான வரவேற்ப்பு நிகழ்வும், மையவாடி உள்ளக வீதி திறப்பு விழா நிகழ்வும் மஸ்ஜிதுல் ஹிழ்ர் பள்ளிவாயலில் (14-05) அன்று மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது.
ஏறாவூர் மீராகேனி பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹிழ்ர் (மையத்துப்பிட்டி) பள்ளிவாயலில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதில் நீண்ட காலமாக எதிர் கொண்டு வந்த பிரச்சினைக்கு தீர்வாக பிரதி அமைச்சர் அவர்களினால் பதினைந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கொங்ரீட் மற்றும் கிரவல் வீதிகள் அமைக்கப்பட்டு கால ஒழுங்கு அடிப்படையில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் நோக்கில் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதில் எதிர் கொண்ட பிரச்சினைக்கு தீர்வாக்கப்பட்ட உள்ளக வீதியினை பிரதி அமைச்சர் அவர்கள் வைபவ ரீதியாக திறந்து வைத்ததுடன் பள்ளிவாயல் நிருவாகத்தினர் மற்றும் ஜமாத்தினர் இனணந்து பிரதி அமைச்சர் அவர்களுக்கு பொண்ணாடை போர்த்தி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிருவாகத்தினர் ஜமாஅத்தார்கள் உற்பட பலர் கலந்துகொண்டனர்.