கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்பட்ட வேகப்புறா பறக்கவிடும் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான விருதுவழங்கும் நிகழ்வு ஏறாவூர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மின்னேரி, மகாஓயா மற்றும் வாகரை ஆகிய பிரதேசங்களிலிருந்து பறக்கவிடப்பட்ட புறாக்கள் ஏறாவூரிலுள்ள அவற்றின் வளர்ப்பிடத்திற்குச் சென்றடையும் நேரம் கணிப்பிடப்பட்டு தெரிவு நடைபெற்றது.
இப்போட்டிகளில் ஏறாவூரைச்சேர்ந்த புறா வளர்ப்பாளர்கள் 45 பேர் பங்கேற்றனர்.
மின்னேரிய மற்றும் மகாஓயா ஆகிய பிரதேசங்களில் புறாக்கள் பறக்கவிடப்பட்டமைக்கான முதலாமிட விருதுகள் எம்ஐஎம். றிஸ்வான் அவரது சகோதரர் எம்ஐஎம் றியாஸ் ஆகியோருக்குக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர்- வேகப் புறா வளர்ப்பாளர் சங்கத்தலைவர் கேபீ. இர்ஷாத் தலைமையில் நடைபெற்ற விருதுவழங்கும் நிகழ்வில் அம்பாறை மாவட்ட சங்கத்தலைவர் ஆர். றிக்காஸ், வர்த்தகர் சங்க பொருளாளர் எம். ஜெஸாலி மற்றும் திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.