தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அன்சார் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு!!!

எம்.வை.அமீர்-
ஸ்ரீ லங்கா மெகா ஆசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எம்.அஹுபறின் தலைமையில், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.ஆர்.முகம்மட் அன்சார் எழுதிய BRIDGE THE GAP, ASKING AND ANSWERING 1 மற்றும் ASKING AND ANSWERING 2 எனும் தலைப்பிலான மூன்று ஆங்கில நூல்களை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் 2018-05-13 ஆம் திகதி இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களும் கௌரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.குணபாலன் அவர்களும் கலந்துகொண்டனர்.
நூல்கள் பற்றிய விமர்சனங்களை அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரியின் உதவிப் பீடாதிபதி எம்.ஏ.கலீல் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆங்கிலமொழி துறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.

நூலாசிரியருக்கு அவரது உறவினர்களாலும் பல்கலைக்கழக சகாக்களினாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் ஏற்பாட்டாளர்களால் ஞாபக சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. நூலின் முதற்பிரதியை நூலாசிரியரின் துணைவியார் றிf ப்கா அன்சார் பெற்றுக்கொண்டார்.



























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -