மின்சாதன பொருட்கள் கையளிப்பு.

எம்.என்.எம்.அப்ராஸ்- 
காரைதீவு பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவடிப்பள்ளி வட்டார உறுப்பினர் கெளரவ எம்.என்.எம். றணீஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் மாவடிப்பள்ளி மத்திய குழுவின் முயற்சியினாலும் மாவடிப்பள்ளி ரஹ்மானியா பள்ளிவாசலின் நீண்டகால தேவையாக இருந்துவந்த மின்சாதன பொருட்களான ஒலிபெருக்கி மற்றும் மின்விளக்கு (போகஸ்) ஆகியவற்றை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கெளரவ ஆரிப் சம்சுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து (20) ரஹ்மானியா பள்ளிவாசலில் நம்பிக்கையாளர் சபையிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் இதனூடாக ஐனாஸாக்கள் இரவு நேரங்களில் நல்லடக்கம் செய்யப்படும் போது தடையாக இருந்து வந்த மின்வெளிச்சம் மற்றும் பயான் நிகழ்வுகளை அனைவரும் செவிமடுக்க முடியாதிருந்த குறைபாடு இதனூடாக நிவர்த்தி செய்யப்பட்டமைக்கு ஊர்மக்கள் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்,பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். றணீஸ் மற்றும் மத்திய குழுவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர் .மேலும் அம்பாரை மாவட்டத் த்தில்தெரிவு செய்யப்பட்ட 09 மையவாடிகளுக்கு இவ் பொருட்கள் வழங்கப் படவிருக்கின்றமை குறிப்பிட்டத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -