வயற்காணியில் மண்போட்டு நிரப்புவதாக பொதுமக்கள் புகார் :

காரைதீவு நிருபர் சகா-
தவிசாளர் பிரதேசசெயலரிடமும் பொலிசாரிடமும் முறைப்பாடு!
சூழல் சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுக்குமா ? பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

காரைதீவு பிரதானவீதியின் மேற்குப்பக்கமாகவுள்ள வயற்காணியை மண்போட்டு நிரப்புவதாக மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் தெரிவித்த புகாரையடுத்து காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் ஸ்தலத்திற்குவிரைந்து பார்வையிட்டார்.
உடனடியாக இதனை காரைதீவு பிரதேச செயலாளரிடமும் சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரியிடமும் முறையிட்டார்.

அதன்படி காரைதீவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் குறித்த பிரதேச கிராமசேவையாளரை அழைத்து உடனடியாக மண்போட்டு நிரப்புவதை நிறுத்தவும் குறித்த காணிஉரிமையாளரை செயலகத்திற்கு வருமாறு கூறும் அறிவிப்பை விடுத்தார்.அதன்படி காணியை மண்போட்டு நிரப்பும் வேலை நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த காணிஉரிமையாளரை விசாரித்த பிற்பாடே இது தொடர்பான முடிவைக்கூறமுடியுமென பிரதேச செயலாளர் கே.லவநாதன் தெரிவித்தார்.

மண்போட்டு நிரப்புகையில் அருகிலிருந்த பிரதேசசபைக்கான அறிவித்தல் பலகையொன்றும் சேதமாக்கப்பட்டு அக்காணிக்குள் சரித்துவிடப்பட்டிருக்கின்றது.

இலங்கை சட்டத்திட்டத்தின்படி வயற்காணியை மண்போட்டுநிரப்பமுடியாது. அது சட்டவிரோதமானது. இதுவரை அதுதொடர்பாக இருந்த சுற்றுநிருபங்கள் விலக்கிக்கொள்ளப்பட்டு இவ்வாரமிருந்து மேலும் இறுக்கமான சட்டதிட்டம் மண்அகழ்வதற்கும் நிரப்புவதற்கும் எதிராக வெளியிடப்பட்டுள்ளது. குறித்த கமநல மாவட்ட உதவிஆணையாளர் இனிமேல் இதற்கான அனுமதியை வழங்கமுடியாது என்று காரைதீவு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மா.சிதம்பரநாதன் கூறினார்.

தவிசாளர் கி.ஜெயசிறில் கூறுகையில்:
காரைதீவு பிரதேசசபைக்குட்பட்ட சகல காணிகளும் எமது நிருவாகத்தின்கீழ் உள்ளன. எமது அனுமதியில்லாமல் மண்போட்டு நிரப்ப முடியாது. முதற்கட்டமாக பிரதேசசெயலாளரிடமும் பொலிசாரிடமும் முறையிட்டுள்ளேன். அவர்களின் நடவடிக்கையைத் தொடர்ந்து எனது செயற்பாடு அமையும். அதுவரை புகார் தெரிவித்த மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் பெறுமை காக்கவேண்டும் என்றார்.

பொலிசாரிடமிருந்து இதற்கான எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோன்று இதுவரை எனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான காரைதீவுப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நடைபெறவில்லை. அடுத்த கூட்டத்தில் இப்பிரச்சினையை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கவிருக்கின்றேன் என்றும் என்றார்.
சூழல் சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுக்குமா ? பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -