வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரதி அமைச்சர் பைசால் காசீம்!


சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திற்கு 1 கோடி ரூபா நிதியினை சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம் ஒதுக்கீடு செய்து தனதுவாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் என வைத்தியசாலை அபிவிருத்தி சபை செயலாளர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பிரதி அமைச்சர் பைசால் காசீம் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திசபையினருக்குமிடையேயான சந்திப்பு கடந்த 21.04.2018ம் திகதி பிரதி அமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றிருந்தது. இச்சந்திப்பில்வைத்து பிரதி அமைச்சர் பைசால் காசீம் வைத்தியசாலை அபிவிருத்தி சபையினருக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைவாகவே இந்நிதியினைஒதுக்கீடு செய்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீமின் பணிப்புரைக்கு அமைவாக சாய்ந்தமருது வைத்தியசாலையின் திருத்த வேலைகளுக்காகஅதாவது விடுதிகளுக்கான சீலிங் சீட் மற்றும் விடுதிகளுக்கான பாதுகாப்பு அலுமினிய வலை பொருத்துதல் வேலைகளுக்கு 5 மில்லியன்ரூபாவும், வைத்தியசாலையின் கூட்ட மண்டப நிர்மாணத்திற்கு 5 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிதி) கே.டி.எல்.ஜி.குணவர்தன 11.05.2018ம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் பத்தரமுல்ல கட்டடங்கள்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஆர்.ஜெயச்சந்திரனுக்கு அறிவித்துள்ளதுடன் வேலைகளை ஆரம்பிக்கும் படியும்கேட்டுக்கொண்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு நிதியொதுக்கீடு செய்துதந்த பிரதி அமைச்சர் பைசால் காசீமுக்கு வைத்தியசாலை அபிவிருத்தி சபைசார்பாகவும் வைத்தியசாலை வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் சார்பாகவும் சாய்ந்தமருது மக்கள் சார்பாகவும் நன்றிகளைத்தெரிவிப்பதாகவும் செயலாளர் றியாத் ஏ. மஜீத் மேலும் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -