ஏ.ஆர்.எம்.றிபாய்-
எமது பிரதேசத்தில் அதிகரித்துவரும் டெங்கு நுளம்புப் பெருக்கத்தினை கட்டுப்படுத்தி டெங்கு நோயினை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கிணறுகளுக்கு மீன் இடும் வேலைத்திட்டம் இரண்டு நாட்கள் 10,11ம் திகதிகளில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது
இதற்காக மீன்களை கொள்வனவு செய்வதற்கான நிதியினை பெற்றுத்தருமாறு நகர சபையின் கௌரவ பதில் தவிசாளர் M.L.ரெபுபாசம் அவர்களிடம் முன்வைத்த போது தனது துரித முயற்சியால் 7 வர்தகர்களிடம் இருந்து சுமார் 45000/. ரூபா நிதியினை பெற்று
சுகாதார வைத்திய அதிகாரி DR M.H.M.தாரிக் அவர்களிடம் கையளித்ததை அடுத்து
இன்று கப்பீஸ் எனும் மீன் இடும் வேலைத்திட்டம் ஏறாவூர் நகர் முழுவதும் ஆரம்பமானது.
இதில் சுகாதார வைத்திய அதிகாரி ,சுகாதார பரிசோதகர்கள். ஏறாவூர் நகரசபையின் கௌரவ பதில் தவிசாளர்,நகரசபை ஊழியர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பாதுகாப்பு படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்
இதில் நகரசபையின் பதில் தவிசாளர் உரையாற்றுகையில்
இவ்வாறான விழிப்புணர்வுகளுக்கு
ஒவ்வொரு உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என்றும்
பொதுமக்களிடத்தில் டெங்கு சம்மந்தமான விழிப்புணர்வுகள் தெளிவாக சென்றடைய வேண்டும் என்பதையும்
சுட்டிக்காட்டினார்.
ஏறாவூர் நகர எல்லைக்குள் ஒவ்வொரு வீடுகளும் சுகாதார அதிகாரிகளால் சோதனைக்குள்ளாக்கப்பட்டு ஒவ்வொரு கிணறுகளிலும் இம் மீன் குஞ்சுகள் போடப்படுகின்றது
இதனால் டெங்கு நுளம்புகளின் பாதிப்புகள் மற்றும் உருவாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கமுடியும்
இவ்வாறான முயற்சிகளுக்கு ஏறாவூர் நகரசபை முழு ஆதரவையும் வழங்கிக்கொண்டுள்ளது