சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் ரசாக் ஆகியோர் தலைமையில் இன்று (24) வியாழக்கிழமை காலை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் எம். றிகாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா, அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, ஏ.எம். றினோஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கடந்த ஆண்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் செயற்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட 133 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு இவ்வாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு சாய்ந்தமருதை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை மாநாகர சபை உறுப்பினர்களால் சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.
அத்தோடு வொலிவோரியன் அஷ்ரப் ஞபகார்த்த விளையாட்டு மைதானத்தை கல்முனை மாநகர சபைக்கு கையளிப்பதற்கும் மீனவர்களின் பாவனைக்காக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கு 25 பேர்ச் காணியினை சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினருக்கு வழங்குவதற்கும் சாஹிரா கல்லூரி மைதானம் மற்றும் வொலிவோரியன் அஷ்ரப் ஞபகார்த்த விளையாட்டு மைதானம் என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்கும் தெரிவு செய்யப்பட்ட 21 குடும்பங்களுக்கு சமூர்த்தி வாழ்வாதார உதவி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குமான அனுமதி இதன்போது வழங்கப்பட்டது.