நல்லாட்சி அரசால் திருகோணமலை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது- இம்ரான் எம்.பி


ல்லாட்சி அரசால் திருகோணமலை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவது வருத்தமளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த நல்லாட்சி அரசை உருவாக்குவதில் எமது திருகோணமலை மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். எனினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் இம்மாவட்டத்தின் அபிவிருத்தியில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் எதுவும் நிகழவில்லை. வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், மீன்பிடி என்று சகல துறைகளிலும் பிரட்சனை காணப்படுகிறது. ஆனாலும் இந்த குறைபாடுகளில் ஒரு பகுதியேனும் இன்னும் தீர்க்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களாக எங்களது அதிகாரத்துக்குள் இதன் சிறு பகுதி குறைபாடுகளே எம்மால் தீர்த்து வைக்க முடிந்தது. அமைச்சர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்காமல் இந்த பிரட்சனைகளுக்கு தீர்வு காண முடியாதவர்களாகவே நாங்கள் இன்று உள்ளோம்.
தேர்தல் காலங்களில் நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்ட மகிந்த ராஜபக்சவின் ஆதரவாலரே திருகோணமலையில் பிரதி அமைச்சராக காணப்பட்டார். இந்த மாவட்டத்தில் அதிகாரங்கள் அனைத்தும் அவரிடம் காணப்பட்டதால் எம்மால் நல்லாட்சிக்கு பாடுபட்ட மக்களின் பிரட்சனைகளுக்கு தீர்வு காணமுடியவில்லை.
இவர் அண்மையில் எதிரணிக்கு சென்றதால் அமைச்சரவை மாற்றத்தின்போது திருகோணமலையில் ஆளும் கட்சியில் உள்ள மூன்று உறுப்பினர்களில் ஒருவருக்காவது பிரதி அமைச்சொன்று வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே எஞ்சியது.
தற்போது நல்லாட்சி அரசால் திருகோணமலை முற்றுமுழுதாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் பிரட்சனைகளுக்கு தீர்வு காண மாற்று வழி ஒன்றை இந்த அரசு இம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு மக்களின் அன்றாட பிரட்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுககொடுக்காமல் நாம் இந்த பதவியில் தொடர்ந்தும் இருப்பதில் எந்த பயனுமில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -