கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பதுரியா நகர் இளைஞ்சர் கழக வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசலை இன்று (10) ம் திகதி வியாழக்கிழமை அஷர் தொழுகையோடு உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
பதுரியா சகோதரர்களின் முயற்சியால் தற்காலிக கட்டடத்தில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய பள்ளிவாசலில் இன்றுமுதல் ஐவேளை தொழுகைகளை அப்பிரதேச மக்கள் நிறைவேற்றிக்கொள்ள முடியும்
குறித்த பள்ளிவாசல் திறப்புவிழாவினைத் தொடர்ந்து ரமழானை வரவேற்போம் எனும் தொனிப்பொருளில் மார்க்க சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. மார்க்க சொற்பொழிவுகளை கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, ஜம்இய்யாவின் நிருவாகத் தலைவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட அதிபருமாகிய அஷ்ஷெய்க் ஏ.கபீப் காசிமி மற்றும் தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி, நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட பிரதி அதிபர் அஷ்ஷெய்க் வீ.ரீ.எம். முஸ்தபா தப்லீகி ஆகியோர்கள் சொற்பொழிவுகளை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.