பல்வேறு சமூகநல திட்டங்களை நடைமுறைப்படுத்திவரும் சைத்தூன் நஹார் பௌண்டேசனின் தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வளன்கிவைக்கும் நிகழ்வும் பௌண்டேசனின் ஸ்தாபகரின் உடல் நலத்துக்காக பிராத்தனை செய்யும் நிகழ்வும் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தின் அதிபர் யூ.எல்.நஸாரின் வழிநடத்தலின் கீழ் சாய்ந்தமருது சிங்கர் நிறுவன உரிமையாளர் எஸ்.எச்.ஜிப்ரியின் தலைமையில் 2018-05-16 ஆம் திகதி சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தின் திறந்த வெளியில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் கலந்துகொண்டனர். இங்கு நஹார் பௌண்டேசனின் ஸ்தாபகரது உடல் நலத்துக்காக சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ.ஆதம்பாவா (ராசாதி) அவர்கள் தலைமையில் துஆ பிராத்தனை இடம்பெற்றது.
தேவையுடைய 30 குடும்பங்களுக்கு நிகழ்வின்போது உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பௌண்டேசனின் சாய்ந்தமருது பிரதேச மாதர்சங்க தலைவி பி.எஸ்.ஹஸீனா மற்றும் கல்முனை பிரதேச தலைவி எஸ்.ரீ.நஸீஹா ஆகியோரும் ஆசிரியர் எம்.ஏ.சி.எல்.நஜீம் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.