கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு மேற்கு பகுதியில் 128 ஆம் இலக்க குடியிருப்பு காணிப் பகுதியில் அமைந்துள்ள மக்களின் பிரதான போக்குவரத்து வீதியில் மழை காலங்களில் ஐந்தடிக்கு மேல் மழை நீர் தேங்கி நிற்பதனால் போக்குவரத்து செய்ய முடியாத நிலையிலுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வீதியை நாளாந்தம் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வீதியை மழை காலங்களில் பயன்படுத்த முடியாது,மழை காலம் ஏற்படுவதற்கு முன்னர் கிரவல் இட்டு செப்பனிட்டு தருமாறு அப்பகுதியில் குடியிருக்கும் பொது மக்களின் கையொப்பத்துடன் கந்தளாய் பேராறு மேற்கு கிராம முன்னேற்றச் சங்கம்,மற்றும் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் கையளித்தும் இது வரைக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லையென அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இந்நல்லாட்சி அரசின் உயரதிகாரிகளின் கவனத்தில் எடுத்து அப்பகுதி மக்கள் போக்குவரத்து செய்யும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இவ்வீதியின் தான் கந்தளாய் சிரேஷ்ட ஊடகவியலாளரின் வீடு அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.