காரைதீவு கடற்படைமுகாம் அதிகாரி எடுத்த அதிரடி தீர்மானம்: மக்கள்மகிழ்ச்சி: தவிசாளர் ஜெயசிறில் நேரில் சென்று நன்றி கூறினார்!

காரைதீவு நிருபர் சகா-காரைதீவு கடற்படை முகாம் பொறுப்பதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கையால் காரைதீவு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுவரை காலமும் காரைதீவு எல்லைக்குள் காரைதீவு 3ஆம் பிரிவில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு முன்னாலிருந்த பெயர்ப்பலகையில் கடற்படை முகாம் சாய்ந்தமருது என்றிருந்தது.

இந்த விவகாரத்;தை காரைதீவுப்பிரதேச கடந்த பல ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களில் பொதுமக்கள் பிரதிநிதிகள் பலரும் பகிரங்கமாக சபையில் முறையிட்டிருந்தனர். அதாவது 'காரைதீவு எல்லைக்குள் உள்ள முகாமிற்கு காரைதீவு என்று போர்ட்ட போடப்படவேண்டும் இன்றேல் சாய்ந்தமருதில் அமையுங்கள் ' என்று கோரிவந்தனர். இக்கோரிக்கை பல தடவைகளில் வரும் அரசியல்வாதிகளிடம் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டுவந்தன. மக்கள் மத்தியில் அணமைக்காலமாக இது ஒரு பேசுபொருளாக இருந்துவந்தன.

இக்கோரிக்கை விடுக்கப்படும்போதெல்லாம் சபை அமர்வுகளில் நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுவந்ததே தவிர பெயர் மாற்றப்படவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதுபோன்று தெரியவில்லை. இப்படி பல பிரச்சினைகள் உள்ளன என்பது வேறு விடயம்.

ஆனால் அண்மையில் காரைதீவுப்பிரதேசசபைக்குத் தெரிவான புதிய தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கடந்த வாரம் கடற்படை முகாமிற்குச்சென்று பொறுப்பதிகாரி விஜயவர்த்தனவிடம் இவ்விடயத்தைக் கூறினார். தவிசாளரது நியாயமான காரணத்தை ஏற்றுக்கொண்ட பொறுப்பதிகாரி மேலிடத்திற்கக்கூறி நடவடிக்கை எடுப்பதாகக்கூறியிருந்தார்.

ஒரு வாரகாலத்துள் அந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டு காரைதீவு எனப்பெயர்மாற்றம் செய்யப்பட்டு தற்போது நடப்பட்டுள்ளது. இதனையறிந்த பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் நேற்று படைமுகாமிற்குச்சென்று பொறுப்பதிகாரிக்கு நன்றி தெரிவித்ததுடன் வாழ்த்தும் தெரிவித்தார்.

நகத்தால் எடுக்கப்படவேண்டிய முள்ளை அலவாங்கால் எடுக்கவேண்டும் என்றெண்ணி அக்கறையில்லாதவர்கள் இருக்க புதிய தவிசாளர் நகத்தாலே இதனைச் சாதித்தமையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இப்படி களத்தில்நின்று உடனடியாக குரல்கொடுப்பதோடு சேவைசெய்யக்கூடிய அரசியல் தலைமைத்துவமே எமக்குத்தேவையென மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -