அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-
மத்திய அரசாங்கத்தின் முறையான அனுமதியின்றி வெளிநாட்டு நபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ முசலிப் பிரதேசத்தில் காணிகளை வழங்குவதை முசலி பிரதேச அபிவிருத்தி குழு தடைசெய்துள்ளது.
மேற்குறிப்பிட்ட சாரார் காணிகளைப் பெற்றுக்கொண்டு தாங்கள் விரும்பியவாறு வளங்களை சூறையாடுவதாலும் சூழலை மாசுபடுத்துவதாலும் மற்றும் உள்ளுர்வாசிகளின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு தடையை ஏற்படுத்துவதாலுமே அபிவிருத்திக்குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
முசலி பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினா;களான காதர் மஸ்தான் சாள்ஸ் ஆகியோரின் தலைமையில் அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று காலை (21.05.2018) இடம்பெற்றபோது உள்ளுர்வாசிகளினதும் தொழில்முயற்சியாளர்களினதும் முறைப்பாட்டை கருத்திற்கொண்டே இந்த தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர்களான அலிகான் ஷரீப், நியாஸ், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான், பிரதி தவிசாளர் முகுசீன் றயிசுதின், முசலி பிரதேச சபை உறுப்பினர்கள்,திணைக்களத் தலைவர்கள், சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மக்களின் காணிப்பிரச்சினை, வாழ்வாதாரம், சமூர்த்தித்திட்டம், மின்சாரம், ஆசிரியர் பற்றாக்குறை, மண் அகழ்வு, வன இலாகா நெருக்கடி போன்ற பல பிரச்சினைகள் பேசப்பட்டு சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக சிலாவத்துறை முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டம் பிரதேச செயலாளரால் இடைநிறுத்தப்பட்டமை குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
கூட்டம் முடிவடைந்ததும் குறித்த வீட்டுத்திட்டக் காணிக்கு நேரடியாகச் சென்ற கூட்ட முக்கியஸ்தர்கள் முடிவு எட்டப்படாத நிலையில் அங்கிருந்து திரும்பினர்.
எனினும் மீள்குடியேறி வரும் முசலி மக்களுக்குக் கிடைத்த இவ்வெளிநாட்டு வீட்டுத்திட்டத்தை திரும்பி விடாத வகையில் சமரசமான பேச்சுவார்த்தை மூலம் சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி ஆகிய பிரதேசங்களில் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு அணித்தாக, வனஇலாக்கா திணைக்களம் வர்த்தமானி பிரகடனத்தை காரணங்காட்டிக்கொண்டு, மக்கள் குடியிருப்புக்களில் தேவையற்ற வீணான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அந்தப் பிரதேச மக்கள் தமக்கு எழுத்து மூலம் அறியத்தந்துள்ளதால், அவர்களின்;நலன்களுக்கும், வாழ்வாதார நடவடிக்கைகளுக்கும் குந்தகம் விளைவிக்காத வகையில் வனஇலாக்கப்பகுதியினர் தமது கடமைகளை மேற்கொள்ளவேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இங்கு வலியுறுத்தினார்
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த பிராந்திய வனஇலாக்கா அதிகாரியிடம் இந்த மக்களின் கஷ்டங்களை எடுத்துரைத்த அமைச்சர் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் இரண்டு பக்கங்களிலோ அல்லது மூன்று பக்கங்களிலோ மீள்குடியேறிய மக்கள் வாழ்க்கை நடத்தும்போது, அவர்களுக்கிடையிலே வனஇலாக்காவும் நுழைந்துகொண்டு அந்தப் பிரதேசம் வனஇலாக்காவுக்கு சொந்தமானதெனவும் அதனை தாங்களே பாரிபாலிப்பதாகவும் வார்த்தமானி அறிவித்தலை காரணங்காட்டி, தமது சொந்த காணிகளில் மீள்குடியேறிய மக்களுக்கு இடைஞ்சல் கொடுப்பது எந்தவகையில் நியாயமென்று அமைச்சர் வனபாதுகாப்பு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
வனஅதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகாரித்துள்ளதாக மக்கள் தம்மிடம் தொரிவிக்கின்றனா; என்றும் அன்றாட ஜீவனோபாய நடவடிக்கைகளுக்கு கூட அந்தப் பிரதேசங்களில் நடமாடுவதில் கெடுபிடிகள் உள்ளதாகவும் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் ரிஷாட்மீள்குடியேறிய மக்கள் வீடுகளை கட்டுவதற்குத் தானும் முறைப்படியாக மண் அகழ்வு மேற்கொள்வதற்கும் இடைஞ்சல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார் இந்த நிலைமையை முடிவுக்கு கொண்டு வர வனஇலாக்கா அதிகாரிகள், உதவி அரச அதிபர், அரச அதிகாரிகள் மற்றும் அந்தப் பிரதேச சமய, சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இவ்வாரம் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி மக்களுக்கு பொருத்தமான தீர்வொன்றை எடுக்குமாறு அமைச்சா; வலியுறுத்தினார்.