வவுனியா புளியங்குளத்தில் "பாரதிக்கோட்டம்" வீட்டுத்திட்டம் இன்று திறந்து வைப்பு.


அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான்,,சிவசக்தி ஆனந்தன் மற்றும் மற்றும் சிவமோகன் ஆகியோர் பங்கேற்பு.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீடற்றோருக்கு "செமட்ட செவண" வீடமைக்கும் திட்டத்தின் கீழ் அறுபத்தெட்டாவது மாதிரிக்கிராமம் இன்று வவுனியா புளியங்குளத்தில் திறந்துவைக்கப்பட்டது.
இலங்கை அரசின் 'உதாகம' யாவருக்கும் வீட்டுரிமை எனும் உயரிய கொள்கையின் அடிப்படையில் கெளரவ வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான, சிவசக்தி ஆனந்தன் மற்றும் டாக்டர் சிவமோகன் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் . உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாரதிக்கோட்டம் என நாமமிட்டு திறக்கப்பட்ட இவ் இருபத்திமூன்று வீடுகளும் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -