கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது குற்றம் சாட்டப்பட்டு அது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது.
குறித்த வழக்கின் தீர்ப்பை ஹோமாகம நீதவான் உதேஷ் ரணதுங்க இன்று வழங்கியுள்ளார்.
இந்நிலையில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின் கைவிரல் அடையாளத்தை பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அவருக்கான தண்டனையை எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி அறிவிப்பதாகவும் நீதவான் கூறியுள்ளார்.